நிழல் - 7

81 5 0
                                    

அவனின் தோளில் சாய்ந்து அழுகையோடு ஷிவானி "யாருமில்லாத அனாதையான எனக்கு உங்களை மாதிரி ஒருத்தர் கிடைப்பாங்கன்னு கனவில் கூட நினைக்கவில்லை... என் அப்பாவும் அம்மாவும் காதலிச்சு அவங்க வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணிகிட்டாங்க... என்னோட 9 வயதில் ஒரு விபத்தில் அவங்க இரண்டு பேரும் இறந்த பிறகு என்னை ஏற்றுக்கொள்ள எந்த சொந்தமும் முன் வரவில்லை...

அப்பாவிற்கு தெரிந்த ஒரு நண்பர் என்னை ஆசிரமத்தில் சேர்த்து விட்டார்... அவருக்கும் என்னை அவர் வீட்டில் வைத்து பார்த்துக்கொள்ளும் அளவுக்கு வசதி கிடையாது... அப்பப்போ வந்து என்னை பார்த்துவிட்டு செல்வார்... அந்த அங்கிளும் நான் 10ம் வகுப்பு படிக்கும் போது கேன்சர் வந்து இறந்துட்டாங்க... எனக்குன்னு இருந்த ஒரு ஆதரவும் அன்றோடு முடிந்தது. நான் அசிரமத்திலிருந்தே 12ம் வகுப்புவரை படித்தேன்... அதற்கு மேல் அவங்க படிக்க வைக்க மாட்டாங்க... 18 வயதுக்கு பிறகு வேலை தேடிக்கொண்டு அங்கிருந்து நாம் விலகிவிட வேண்டும்... ஆனால் எனக்கு மேலே படிக்கணும்னு ஆசை... ஆசிரமத் தலைவர் தான் இந்த டிரஸ்டில் எனக்கு படிப்புதவி செய்ய ஏற்பாடு செஞ்சு தந்தாங்க...

அப்பா-அம்மா விபத்தில் இறந்த போது அவங்க உடலை பிரதே பரிசோதனை செய்து வாங்குவதற்கு மிகவும் கஷ்டப்பட்டோம். அவர்களை இடித்த கார் ஒரு பெரிய அரசியல்வாதியின் மகன் குடிபோதையில் ஒட்டி வந்தது. இத்தனைக்கும் இரண்டு பேரும் ரோட்டோரமாக தான் நடந்து வந்தார்களாம்... ஆனால் அந்த அரசியல்வாதி அவர் மகனை காப்பாத்திக்கொள்ள தவறு எங்க மேலேன்னு திருப்பி விட்டுட்டாங்க... அதற்கு காவல்துறையும் உதவி பண்ணிருக்காங்க... அங்கிள் தான் மிகவும் கஷ்ட பட்டு உடல்களை வாங்கி காரியம் செய்வதற்கு உதவினார். அந்த சிறு வயதில் எனக்கு எதுவும் புரியவில்லை...

நான் வளர்ந்த பிறகு அங்கிள் இதை என்னிடம் சொன்னாங்க... கேட்கும் போது எனக்கு அவ்ளோ கோபம் வந்தது. காவல்துறை என்பது மக்களுக்கு நியாமான முறையில் உதவி புரிய தானே... "காவல்துறை உங்கள் நண்பன்"னு சொல்லறாங்க... என்னை பொறுத்தவரை எனக்கு எதிரி என்ற கோபத்தோடுதானிருந்தேன்... ஆனால் போகப்போக அந்த கோபம் என்னைப்போல் இயலாதவர்களுக்கு நியாயம் பெற்று தருவதில் உதவுவதற்க்காவது நான் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தை கொடுத்தது. அதனால் தான் விரும்பியே இந்த சட்ட படிப்பில் சேர்ந்தேன்.

நிழலே நெருங்காதே!!Where stories live. Discover now