நிழல் - 17

62 3 0
                                    


உத்ராவிற்கு அன்று காலை மட்டும் தான் க்ளாஸ் இருந்தது. அதை முடித்து மெஸில் சென்று சாப்பிட்டு முடித்து... அறைக்கு வந்து சிறிது ஓய்வெடுத்து விட்டு படிக்கலாம் என்றெண்ணி அவள் தனது படுக்கையில் படுத்த சில நிமிடங்களில் அவளின் அலைபேசியில் வாட்சாப் மெசேஜ் வந்தற்கான சப்தம் எழுப்பவும் என்னவென்று பார்த்தாள்.... அதில் தெரியாத எண்ணிலிருந்து ஒரு வீடியோ வந்திருந்தது... அதோடு இதை கண்டிப்பாக பார்க்கவும் என்று குறிப்பிட்டிருக்க... யாராக இருக்கும்?... என்ற எண்ணத்துடன் அதை திறந்து அந்த வீடியோவை பார்த்தவள் அதிர்ச்சியில் கையிலிருந்த மொபைலை தவற விட்டாள்... அவளுக்கு மயக்கம் வருவது போல் இருக்க தான் பார்த்தது உண்மை தானா? என்று மீண்டும் அதை எடுத்து பார்க்க... அதில் அவள் இன்று காலை விடுதி அறையில் குளித்து விட்டு வந்து உடைமாற்றுவது தெளிவாக படம் பிடிக்க பட்டிருந்தது.

பொதுவாக உத்ரா குளியலறையிலேயே உடை மாற்றி விடுவாள். இன்று காலை தான் படித்து கொண்டிருந்ததில் நேரமாகிவிட அவசரமாக குளிக்க சென்றவள் மாற்றுடை எடுத்து செல்ல மறந்து விட்டாள். சரி அறையில் தான் மட்டும் தானே வெளியே சென்று மாற்றி கொள்ளலாம் என்றெண்ணி வெளியே வந்து உடை மாற்றினாள். அது தான் வீடியோவாக அதிலிருந்தது.

அந்த வீடியோவை பார்த்தவள் பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே சில நிமிடமிருக்க அந்த எண்ணிலிருந்து அவளுக்கு அழைப்பு வந்ததது. அவள் அதை ஏற்காமல் இருக்கவும்... "அழைப்பை ஏற்கவும் இல்லையென்றால் இந்த வீடியோவை இப்போதே நெட்டில் பதிவேற்றி விடுவேன்" என்ற மெசேஜ் வந்தது.

அதை கண்டவள் அடுத்த அழைப்பு வரவும் கை நடுங்க மொபைலை ஆன் செய்து காதில் வைத்தாள் மறுமுனையில்...

"என்ன உத்ரா வீடியோல நீ ரொம்ப அழகா இருக்கிறாய் இல்லையா?" என்று அட்டகாசமான சிரிப்புடன் வினவவும்...

"யார் நீ?.. எதுக்கு இப்படி பண்ணற?..." என்று அழுகையுடன் உத்ரா கேட்டாள்.

நிழலே நெருங்காதே!!Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ