விஜயலக்ஷ்மியிடம் பேசிவிட்டு வீட்டிற்கு வந்த ஷிவானி தன் நிலை எண்ணி ஒரு மூச்சு அழுது தீர்த்ததாள்... பின் ஒரு முடிவுடன் எழுந்து தனது லேப்டாப் எடுத்து ஷிவேஷை விவாகரத்து செய்வதற்கான படிவங்களை தயார் படுத்தினாள்... தான் படித்த சட்ட படிப்பு தனக்கு எந்த விதத்தில் உதவுகிறது என்ற கசப்பான நினைவுடன் மீண்டும் வந்த அழுகையை கட்டுப் படுத்தி எல்லாவற்றையும் சரி பார்த்து, பிரதி எடுத்து அதில் தான் கையெழுத்து இட வேண்டிய இடங்களில் கையெழுத்திட்டாள். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே தானிருந்தது...
அவளின் நினைவிலிருந்தது ஒன்றே தான்... எந்த வகையிலும் ஷிவேஷின் தாய் தாங்கள் இணைவதை ஏற்றுக்கொள்ள போவதில்லை என்கிற பட்சத்தில் தன்னால் ஷிவேஷின் வாழ்வு பாதிக்க கூடாது என்று எண்ணியே இந்த முடிவெடுத்திருந்தாள்... அவன் வாழ்வே இவள் தான் என்று இவளுக்கு யார் புரிய வைப்பது...
ஷிவேஷ்வரனும், ராமநாதனும் திரும்ப திரும்ப அழைப்பு விடுத்தும் அதை தவிர்த்தவள் ஷிவேஷின் வருகைக்காக காத்திருந்தாள். எப்படியும் அவன் இங்கு வருவான் என்ற நம்பிக்கை இருந்தது... அவன் வரவும் அவனிடம் தான் தயார் செய்த காகிதங்களை கொடுத்தவள்... அவன் அடித்த அடியில் கையிலிருந்த காகிதங்களை தவற விட்டாள். அடியின் வீரியம் தாங்க முடியாமல் கன்னம் எரிய கையால் கன்னத்தை பிடித்து கொண்டே அவனை ஏறிட்டாள்...
ஷிவேஷ்வரன் உச்சகட்ட கோபத்தில் கண்கள் சிவக்க "என்ன சொன்ன? திரும்ப சொல்லு..." என்றான்.
அவள் சிறிது தைரியத்தை வரவழைத்து கொண்டு அவனின் முகத்தை பார்க்காமல் தலை குனிந்து "ஷிவா நாம சேர்வதற்கான வாய்ப்பே இல்லை... அதற்கு அத்தை ஒருநாளும் ஒத்துக்க மாட்டங்கன்னு எனக்கு நல்லாவே புரிஞ்சிடுச்சு... அவங்க சம்மதமில்லாமல் என்னால் உங்களோடான வாழ்கையை நினைச்சு பார்க்க முடியாது... நான் ஒதுங்கி கொள்ளகிறேன்... நீங்க அத்தை சொல்லற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கோங்க...அது தான் அத்தைக்கு சந்தோசத்தை கொடுக்கும்..." என்றாள்.