"எங்கள பத்தி சொல்ல இன்னா இருக்கு!!"
"நானும் இந்தா இவளும் ஒரே வுட்டுல தான் வாக்கபட்டோம்!!
இத கட்டுனது அல்பாய்சுல போச்சு!! என்ன கட்டுனது குடிய கட்ட ஆரமிச்சது!!
நானும் இதும் ஸ்க்கூல் வேளைக்கும்,, வீட்டு வேளைக்கும் போனோம் எனக்கு ஒரு பையன் ஆறாவது படிக்குறான், பொண்ணு பண்ணண்டாவது படிக்குது!! நா வேள செய்யுற ஸ்க்கூலயும் சரி எம்புள்ளங்க படிக்குற ஸ்க்கூலயும் கண்ணம்மா இன்ஸ்பரேசன் நடக்குது!! அதுல நாங்க எல்லாம் சண்ட போட கத்துகுணோம்!! "நா சொல்ட்டுயிருக்கைலே
சுவாதி :"ஓ சூப்பர் "
"எம்பொண்ணு கூட படிக்குற பொண்ணு எங்க வுட்டுக்கு படிக்க வரும்!! அதாண்ட போய் இந்த மனுச அவன் குசும்ப காமிச்சுறுக்கான்!! கூட இருந்த எம்புளைங்க கத்துகுன வித்தையெல்லாம் இறக்கிற்கானுங்க!! அந்த ஆலு பொட்டுணு போய்ட்டாண்!!வந்து பாத்த இரத்த வெள்ளத்துல என் புருஷன்!! கோவம் வந்து எம்புள்ளங்கல அடுச்சேன்!! அப்பறமா நடந்தத சொன்னதும் என்ன சொல்ரதுன்னு தெரில !! பொண்ணு வயசு புள்ளட்ட இப்படி நடந்தான்னு சொன்னா!! ஆத்தரம் எனக்கே வந்து செத்த பொணத்த செருப்பாலே அடிச்சேன்!! அதுங்க பண்ணது சரிதான்!! அதுக்கு பட்டம் விருது குடுக்கலனாலும் பரவாயில்ல இவங்க கேஸ் போட்டு வாழ்க்கைய நாசாம் பண்ணிருவாங்களே!! அதும் அந்த பொண்ணு அடுத்த வீட்டு பொண்ணு!! அதயும் டேஸன்க்கு இழுத்தாந்து மானத்த வாங்கிடுவாங்க!! அதான் நாங்க பழி ஏத்துட்டோம்"தொண்ட விம்மி சொன்னேன்
"என்ட அந்த ஆளு தப்பா நடந்துகிட்டா, அதுல தப்பிக்க நானும் என்ன காப்பாத்த அக்காவும் அவர அடுச்சு கொண்ணோம்னு சொல்டோம்"அகல்யா முடிச்சா
சுவாதி : "அப்போ புள்ளைங்க!!?"
தரண்யா : அந்த பொண்ணோட அம்மா அப்பா பொறுப்பு ஏத்துகிட்டாங்க!! ஆனா அவங்களே எம்புட்டு நாள்னு தெர்ல,"
சுவாதி : "பரவால சின்ன புள்ளங்கனாலும்! தெளிவா ஸ்க்கூல்ல கத்துட்டத யூஸ் பண்ணி ஒரு பொண்ணோட மானத்த காப்பாத்திற்காங்க!! " யோசிச்ச அந்த பொண்ணு
YOU ARE READING
விழித்திரு கண்ணம்மா
Humorஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் பாரதி காண துடித்த கண்ணம்மா உள்ளாள், அவள் எழுந்தால் பிரபஞ்சத்திற்கு பயந்து ஒழிய அவசியம் இல்லை, பிரபஞ்சத்திற்கு கற்று தருவாள் பயம் என்பதை....