#தரண்யா கூற்று
அகல்யா '"இன்னாக்கா இது இப்படி ஆச்சு?"
தரண்யா:"அதான்டி எனக்கும் புரில!! நல்லா தான் நம்மளோட பேசிட்டு படுத்துது!!! திடீர்னு இப்படி ஆச்சே டி!"
அகல்யா:"ஆமாக்கா அத அந்த நிலைமைல பாத்ததும் உசுரே போயிடுச்சு!"
லலிதா:"ஏ! ஒழுங்கா சொல்லுங்க என்ன ஆச்சு?"
என்னாடா இந்த அதிகாரி எங்கள இப்படி கேக்குது!!
அகல்யா:"மாடம் இன்னைக்கு தான் அந்த பொண்ணு எங்கள அதோட படுத்துக்க சொல்லிபுட்டு அந்த வார்டன்ட பெர்மிசன் வாங்குச்சு! நாங்களும் சரின்னு அதோட படுத்தோம்! எனக்கும் அக்காக்கும் நடுவுல படுத்துருந்தது! திடீர்னு யாரோ உலுக்கர மாறி இருந்ததேனு எழுந்தா அந்த பொண்ணு சோத்தாங்கை ஒருபக்கமா இழுக்க கண்ணு முழி இரண்டுமே காணும்மா! வெள்ளையா தான் கண்ணு எனக்கு தெரிஞ்சது அந்த பக்கமும் இந்த பக்கமும் கையையும் கால்லையும் இழுத்துட்டு இருந்தது பாத்துட்டு ஈரக்குலயே நடுங்குது!"
லலிதா:"அந்த பொண்ணு இங்க வந்ததுல இருந்து இந்த மாறி தான்!! ச்ச என்ன வாழ்க்கை இது பாவம்! சரி உங்ககிட்ட எதவாது அந்த கொலை பத்தி இல்லனா ஏன் தான் செத்தாதா சொல்லி சட்டத்த ஏமாத்தி போச்சுனு எதாவது உங்ககிட்ட கோர்ட்ல சொல்ல வேண்டியத சொன்னுச்சா??"
அதானே!அவங்க அவங்களுக்கு அவங்க பிரச்சனை!! கடவுளே
தரண்யா:"அப்படி எல்லாம் ஒன்னும் சொல்லல மாடம் இந்தா இந்த நோட்ல தான் எப்பவும் போல ஏதோ எழுதுட்டு இருந்தது!"
அந்த அதிகாரி அத வாங்கி பாத்துச்சு!!
லலிதா:"ம்க்கும்! இந்த நம்பர பத்தி கேட்டாலும் ஒன்னும் சொல்ல மாட்டேங்குதே!! ஐயோக்கிய பயலுங்க எல்லாம் இங்க இருக்கங்க! நிம்மதியா போச்சு! ஆனா இந்த பொண்ணு நல்லது தான் பண்ணுச்சு!ஷ்ஷ்ஷ் ஒரே தலை வழியா இருக்கு!! சரி போங்க!"
நாங்க எங்க இடத்துக்கு வந்துட்டோம்!!
தரண்யா:"என்னடி இது?? அந்த பொண்ணுக்கு உடம்புல அப்படி என்னதான் இருக்கோ தெர்ல! எப்ப பாரு எதாவது ஆகுது"
YOU ARE READING
விழித்திரு கண்ணம்மா
Humorஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் பாரதி காண துடித்த கண்ணம்மா உள்ளாள், அவள் எழுந்தால் பிரபஞ்சத்திற்கு பயந்து ஒழிய அவசியம் இல்லை, பிரபஞ்சத்திற்கு கற்று தருவாள் பயம் என்பதை....