34

146 14 2
                                    

இது எதோ பங்க்ஷன் ல எடுத்த மாதிரி இருக்கே...
ஆஆஆ சுவாதி மேம் இருக்காங்க... இது இந்த இண்ஸ்பிரேஷன் ல உள்ளவங்க .. ஆஆஆ இது...... அவங்க எப்படி இங்க...!!

தயா:"இது ...?"

ஆதவ்:"எஸ்! கண்ணம்மா இண்ஸ்பிரேஷன் ல கிடைச்ச எவிடண்ஸ் தான் இது!"

ஜான்சி:"இதுல சுவாதி மேம்க்கு பக்கத்துல இருக்குறது யாருனு தெரியுமா?"

தயா:"எஸ்! அனிதா மேடம்! வினித் சாரோட வைப்!"

ஆதவ்:"எஸ்! சுவாதி மேம் அ லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்க இருந்த வினித் சாரோட வைப் தான் இந்த அனிதா.. அவங்களுக்கு கல்யாணம் ஆகி 2 அரை வருஷம் ஆகுது.. இந்த போட்டோ அவங்களுக்கு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி எடுத்தது!"

தேவி:"அது எப்படி இவ்ளோ க்ரேக்டா சொல்றீங்க?"

ஜான்சி:"இந்த போட்டோ ல உள்ள தேதிய பாருங்க.. இது அவங்க கல்யாண போட்டோ இதுல உள்ள தேதி ய பாருங்க!"

ஆமா...... அப்ப சுவாதி மேம்க்கு முன்னாடியே தெரியுமா மேம்ம...

ஆதவ்:"மேடம் போய் ஆரம்பிச்சது தான் கண்ணம்மா இண்ஸ்பிரேஷன்.. அதுக்கு முன்னாடி அங்க சர்ச் & ஒரு ஆதரவற்றவங்கள காப்பத்துற ஒரு ஆர்கனைஷேஷன் இருந்துருக்கு.. அதுல உள்ள எண்ட்ரி வச்சு பாக்கும் போது கண்ணம்மா சேந்து ஐ மீன் நம்ம சுவாதி மேம் அங்க சேரதுக்கு 2 வருஷத்துக்கு முன்னாடி அங்க வந்த பொண்ணு அனிதா.. "

ஜான்சி:"2 அரை வருஷத்துக்கு முன்னாடி அனிதா தனக்கு ஒரு வேலை கிடச்சுட்டதா சொல்லிட்டு கிளம்பி போயிருக்காங்க! அவங்க கிளம்பி போன அன்னைக்கு தானும் அதே வேலைக்கு ட்ரை பண்றதா சொல்லிட்டு போன கண்ணம்மா 1 வாரத்துக்கு அப்பறம் வந்துருக்காங்க... தனக்கு அந்த வேலை ஒத்து வர்ல னு‌‌ சொல்லிற்காங்க அவங்க போயிட்டு வந்த கேப் ல தான் வினித் சாருக்கும் அனிதா மேடம்க்கும் கல்யாணம் ஆனது!"

தேவி:"ஹலோ ஹலோ! என்ன சொல்ல வரீங்க?? எதோ கதை கதையா சொல்றீங்க!!? இதுல அனிதா மேடம் இருக்குறதுக்கும் மேடம் கொலை பண்ணலங்கரத்துக்கும் என்ன சம்மந்தம்??"

ஆதவ்:"8 வருஷம் முன்னாடி ஐத்தராபாத் ல ஒரு அனாதை ஆஸ்ரமத்துல வளர்ந்த 18 வயசு தமிழ் பொண்ண கடத்திட்டு போய் கற்பழிச்சாங்க னு ஒரு நியூஸ் வந்தது! கோர்ட்ல அந்த பெண் விபச்சாரி னு சொல்லி ரொம்ப கேவலபடுத்தினாங்க.. அவளுக்கு சாட்சி எல்லாம் எதிரா இருந்தது! அதுல பாதிக்கப்பட்ட பெண் வேற‌ யாரும் இல்ல இந்த அனிதா தான்.. சைக்காலஜி ட்ரீட்மென்ட்காக இங்க இருக்க ஆஸ்ரமத்துக்கு மாத்தினாங்க.. "

தேவி:"சரி அதுக்கு ?? பாதிக்கப்பட்ட பெண்கள் எல்லாம் ஒன்னா இருக்காங்க.. அங்க இருக்க அத்தனை பேருக்கு பின்னாடியும் இந்த மாதிரி ஏதோ ஒரு விதத்துல சமூகத்துல அடிப்பட்ட கதை இருக்கு... அதுக்கும் இந்த கேஸீக்கும் என்ன சம்பந்தம்??"

ஜான்சி:"இருக்கு.. தன்னைய கேவலப்படுத்துனத தாங்கிக்காத அந்த பொண்ணு கதறி அழுதா.. அப்ப அவ பொளம்புனது‌ தான்.. நாம பேசிட்டு இருக்க கேஸ் ல அந்த 5 பேர் செத்த விதம்.. "

தயா, தேவி:"வாட்...."

விழித்திரு கண்ணம்மாWhere stories live. Discover now