#தரண்யா கூற்று
ஒரு வழியா அந்த புள்ளைய சரி பண்ணி கொண்டு வந்துட்டாங்க.. கூடவே ஒரு டாக்டர் பொண்ணு வந்துருக்கு.. இன்னா நடக்குதுனு பாப்போம்..
கங்கா:"இதோ பாரு இப்படியே அமைதியா இருந்தா விட்டுருவாங்கனு நினைக்காதே ! சட்டத்த பத்தி உனக்கு நா சொல்லனும்னு இல்ல!!"
லலிதா:"ஏஏ நானும் பாத்துட்டே இருக்கேன் வாய தொறக்க மாட்ற!? "
அருந்ததி:"மேடம்! ஷீ இஸ் எ பேஸண்ட்.. அவங்கள்ட காம்மா பிகேவ் பண்ணுங்க!"
லலிதா:"ஏஏ உனக்கு தான் பேஷண்ட்.. எங்களுக்கு இவ ஒரு அக்கியூஸ்ட்"
கங்கா:"எஸ் நீங்க உங்க டாக்டர் சேவைய மட்டும் செய்ங்க நாங்க எங்க வேலைய தான் பாக்குறோம்!! ஹலோ இந்த நம்பர்ஸ்க்கு என்ன அர்த்தம்?? "
என்னடா இது வந்ததும் வராததுமா அந்த புள்ளைய இன்னாம்மா கேள்வி கேக்குதுங்க.. இதுங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது..
சுவாதி:"நீங்க தான் பெரிய சீ.பி.ஐ. ஆச்சே மேடம்!! எவ்ளோ பெரிய அப்பாடக்கரா இருந்தாலும் உங்கக்கிட்ட இருந்து தப்ப முடியாதே!! கண்டுபிடிங்க மேடம்"
அப்படி சொல்லு டி என் தங்கக்கட்டி.. இதுங்களுக்கு கண்டுபிடிக்க வக்குள்ள வந்துருச்சுங்க சட்டத்த பத்தி பேச
கங்கா:"ஏஏ என்ன கிண்டலா?"
தரண்யா:"இல்ல நக்கல்"
கங்கா:"என்ன?"
தரண்யா:"அஅ இல்ல இல்ல விக்கல் விக்கல் மாடம்.. என்னு தெர்ல எந்த பரதேசியோ என்னைய திட்டுதுங்க போல அதான் காலையில இருந்து ஒரே விக்கல்!"
லலிதா:"ஏஏ நீங்க என்ன பண்றீங்க இங்க??"
அகல்யா:"சும்மா அப்படியே காத்து வாங்க வந்தோம்"
கங்கா:"ஏஏ என்ன நினச்சுட்டு இருக்கீங்க எல்லாம்?? சி.பி.ஐ அதிகாரியும் இண்ஸ்பெக்டரும் நிக்குரோம் கொஞ்சம் கூட மரியாதை இல்ல!? என்ன திமிரா?? என்ன மேடம் இது எல்லாம்?"
லலிதா:"என்ன பண்ணி தொலைக்குறது?? இந்தோ இந்த மேடம் ஊருக்கு எல்லாம் நல்லது பண்ணிட்டு நம்மல சாவடிக்கவே இங்க வந்துருக்காங்களே"
YOU ARE READING
விழித்திரு கண்ணம்மா
Humorஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் பாரதி காண துடித்த கண்ணம்மா உள்ளாள், அவள் எழுந்தால் பிரபஞ்சத்திற்கு பயந்து ஒழிய அவசியம் இல்லை, பிரபஞ்சத்திற்கு கற்று தருவாள் பயம் என்பதை....