27

111 13 6
                                    

வீடியோ ப்ளே ஆகுது!!! 🎥🎥

ஆஆஆ அதுல ஆதவ்! எங்க காலேஜ் மேட்டர்ல மேம்காக உதவுன டிடெக்டிவ் ஆவிஸர்!!!

"வணக்கம் நான் உங்கள் தோழன் ஆதவ் நானும் உங்கள போல ஒருத்தர் தான்! இப்ப நா இருக்குறது மதுரை பக்கத்துல உள்ள ஒரு சின்ன கிராமம்!! சுமார் ஒரு வருடம் முன் நெட்ல ட்ரையல் ரூம்ல ட்ரெஸ் மாத்துனது வீடியோவா வெளில வந்ததால சூசைட் பண்ண இனியாவோட அப்பா கடையில தான் இருக்கேன்!! இங்க பாருங்க இது ஒரு சின்ன துணி கடை!! அங்க ட்ரையல் ரூம பாருங்க!! வெறும் மூனு பக்கமும் ஸ்க்ரீன் தான் ! ஒரு பக்கம் செவுறு! இப்படி வருசையா 4 இருக்கு நாளு ரூம்க்கும் காமண்ணா ஒரு பெரிய மிரர்!! இது ஆண்கள் உடைமாத்தி பாக்குக்குறதுக்கும் இதான்! இத பத்தி வாங்க அந்த பொண்ணோட அப்பாட்ட கேட்போம்! வணக்கம் ஐய்யா!"

"வணக்கம்"

"எல்லாரும் டிஸைன் டிஸைனா லைட் வச்சு கதவு வச்சு அட்றாக்டிவ்வா வைக்கும் போது நீங்க ஏன் இப்படி??"

"என் பொண்ணு போனப்பறம் எதாவது அவ சாவுக்கு விதை போடனும் னு நினைச்சேன்!! பெரிய பெரிய கண்ணாடியும் லைட்டும் ஒரு பொண்ணோட மானத்த வாங்குற வேலை செய்யுதுன்னா! அது என் கடைக்கு வேணாம்னு முடிவு பண்ணேன்!! இப்ப இந்த மாறி தான் இங்க எங்கள சுத்தி உள்ள எல்லாம் கடைகளுமே இதான் வச்சுருக்காங்க!"

ஆதவ்:"சரி இப்படி இருந்தா பொண்ணுங்க மாத்த யோசிச்சு வாங்காம போயிடுவாங்களே? அப்ப உங்க வியாபாரம் ஆகாம மோடிங்கிடுமே! எப்படி இதுல பெண்கள் உடை மாத்துறாங்க!? ஏன்னா மூனு பக்கமும் துணி ஸ்க்ரீன்!!"

"முதல்ல யாருமே மாத்தல! தெரிஞ்சவங்க வாடிக்கையா வாங்குறவங்க சொல்லிட்டு துணிய வீட்டுக்கு எடுத்துட்டு போயி பாத்துட்டு சரியா வர்லனா திரும்பி வந்து மாத்திபாங்க! வெகு தூரம் போறவங்களா இருந்தா எங்க வீடு அடுத்த தெரு தான் அங்க என் பையன் ஆட்டோ ட்ரைவர் அவன் கூட்டிட்டு போவான்! அங்க மாத்தி பாத்து சரியா இருந்தா என் பையன்டே காசு குடுப்பாங்க இல்லனா மறுபடி இங்க கூட்டிட்டு வந்துருவான் என் பையன்!"

விழித்திரு கண்ணம்மாWhere stories live. Discover now