15.

110 17 2
                                    

அருந்ததி:"என்ன லவ்வா!!!"

இவ ஏன் இப்படி ஷாக் ஆகுரா!!

தேவி :" ஏன் டி??"

அருந்ததி :"உன்னோட சேந்து நானும் ட்ராவல் பண்ணேன், அதான் நானும் ஷாக் ஆகிட்டேன்! "

தேவி :"இதுக்கே ஷாக் ஆனா எப்படி அவங்க அடுத்து பண்ண வேளை தான் மாஸ்!"

அருந்ததி :"என்ன வேளை டி?"

'கண்ணால கண்ணால எம்மேல எம்மேல தீயா எரிச்சுப்புட்ட! சொல்லாத சொல்லால உள் நெஞ்சில் ஏதோ கலவரம் புகுத்துப்புட்ட' தயா தான் கால் பண்றான்!

தேவி :"ஹல்லோ தயா!"

தயா :"என்ன டி பண்ற?"

தேவி :"வேற என்ன? அருந்ததி யோட சுவாதி மேம் பத்தி தான் சொல்லிட்டு இருந்தேன்! "

தயா :"உன்ன என்ன பண்ண சொன்னா! என்ன பண்ணிட்டு இருக்க நீ??"

தேவி :"ஐய்யயோ திட்டுறானே! எல்லாம் உன்னால தான்! அடியே அருந்ததி!!

தயா:"சரி சரி! நாம ஒரு முக்கியமான எடத்துக்கு போனும் வா!"

தேவி:"சரி இரு ரெப்ரஷ் ஆகிட்டு வரேன்"

தயா :"ம்! இப்படி சொல்லு! ஆனா ப்ளீச்சிங்க்ல இருந்து எல்லாம் பண்ணிட்டு வா! லேட் ஆச்சு …… கொன்னுடுவேன்!"

தேவி :"சரி டா!"

அருந்ததி :" யாரு டி! ஏன் டி என்னை திட்டுன??"

தேவி :"உன்ட்ட பேசிட்டு என் வேளைய விட்டுடேன்! தயா திட்டுறான்!"

அருந்ததி:" சரி சரி அது எப்பவும் நடக்குறது தானே சரி சரி நீ சீக்கரம் கதைய சொல்லு!"

தேவி :" கதையா?? போடிஇஇ! அவன் போன் பண்ணி திட்டுறான் நீ என்னடானா கதை கேக்குற?? வந்து சொல்றேன் !"

அருந்ததி:"எங்க போற?,வந்து சொல்ல?"

தேவி :"போகும் போதே ஏங்கனு கேக்ககூடாதுனு காலம் காலமா நாம பாளோ பண்றது!"

அருந்ததி :"நிறுத்து! உனக்கே சொல்லள! அத நீ சமாளிக்குற! அதானே!?"

இஇஇஇ

அருந்ததி:"பொதும் இழிச்சது கிளம்பு ! அப்றம் லேட்டான என் பேர கோத்துடுவ! எனக்கு தேவையா?? போ!"

தேவி :"ம்! சரி நீ அது வரை இந்த லாப்ல உள்ளத போட்டு பாருமா!"

அருந்ததி :"சரி டி!"

ஒரு வழியா நா கிளம்பிட்டேன்!

தேவி :" பாய் அரு கதவ சாத்திக்கோ டி, வரதுக்கு முன்னாடி கால் பண்றேன், சரியா?"

அருந்ததி :"சரி அது எல்லாம் விடு, அந்த வினித் சார் இப்ப எங்க இருக்காங்க ? என்ன பண்றாங்க? சுவாதி மேம் இப்படி இருக்குறது தெரிஞ்சு அவங்க எதாது மேம்க்கு ……!"

தேவி :"நிறுத்து டி! அது தெரியாம தான் நானும் இருக்கேன்! சாரையும் ஒரு பக்கம் தேடுறேன்! மேம்க்கு அந்த மாறி நடந்த அப்றம் தான் மேம் செத்தாச்சு அவங்க பாடி ய காணும்னு சொன்னாகளே! அதுல உடஞ்சு போய்டாங்க அவங்கள திசை திருப்ப அவங்க வீட்டுல உள்ளவங்க பாரின் அனுப்புனாங்கனு கேள்வி பட்டேன்! அதுக்கு அப்றம் தெர்ல! சரி நா கிளம்புறேன் டி தயா திட்டுவான் வந்து பேசலாம் "

அருய்ததி :"பாய் டி பாத்து போ, உன் ப்ரண்டுட என்ன கோத்துவிட்டுறாத மா!"

தேவி :"ஓஓ! சரிங்க மேடம்!"

உலக மகா நடிப்புடா சாமி ! நா ரெப்ரெஷ் ஆன நேரத்துல எப்படியும் முப்பது ரீலுக்கு ரொமேன்ஸ் பண்ணிருப்பா! நா கோத்துவிட்டு அந்த சார் அப்படியே இந்த மேடம திட்டிடாலும்!! ஒரு நாள் இல்ல ஒரு நாள் இதுங்க அடிக்குற கூத்து எனக்கு தெரியும்னு சொல்லிடனும்!

ஒரு வழியா இந்த இருட்டுல அவன தேடி கண்டுபிடுச்சுட்டேன்

தயா :"எவ்வளோ நேரம் வெயிட் பண்றது??"

வெயிட் பண்ற நேரமெல்லாம் அந்த மேடமோட செல்பி போட்டோவ வெறிக்க வெறிக்க பாத்துபுட்டு என்னமா கேக்குறான்!

தயா :"ஏய்! உன்ன தான்!"

தேவி :"சாரி! போதுமா? இப்ப நாம எங்க போரோம்?"

தயா :"நோ நோ! இப்ப எதும் சொல்ல முடியாது ! மேடம் உக்காருங்க வண்டி பறந்து போய் நிக்குற எடுத்த பாத்து தெரிஞ்சுக்கோங்க!"

தேவி :"நீ இருக்கியே!சரி போ!"

விழித்திரு கண்ணம்மாWhere stories live. Discover now