#அருந்ததியின் கூற்று
சுவாதி மேம் டாப்லட் போட்டு நல்லா தூங்குறாங்க..
அந்த இரண்டு ட்வின்ஸ் எதோ சொன்னாங்களே கணக்கு எழுத ஆரமிச்சுருவாங்கனு.. அந்த நோட் எங்க..
அவங்கள்டே கேட்டுருவோம்..
தரண்யா :"இன்னம்மா சுவாதி நல்லா தூங்குதா?? "
அருந்ததி :"அஅ நல்லா தூங்குறாங்க.. ஆமா.. நீங்க அப்பத்த ஏதோ சொன்னீங்கள்ள.. மேடம் கணக்கு எழுதுவாங்கனு... அந்த நோட் எங்க இருக்கு?? "
அகழ்யா :"அது எதுக்கு உனக்கு. நீயும் உளவாளி யா?? "
தரண்யா :"ஏம்மா நீயும் வயசு பொண்ணு தானே?? அந்த பொண்ணோட நிலமை வந்தா நீ இன்னா பண்ணுவ?? "
அருந்ததி :"ஐயோ நீங்க நினைக்கிற மாதிரி ஆள் நா இல்லை.. நா மேடம்ம எப்படியாது வெளிய கொண்டு வர கூட்டத்த சேர்ந்தவ தான்"
தரண்யா :"அப்படினா உனக்கு நா தரேன்.. "
ஹப்பாடா. நோட் கிடச்சது..
ஆஆஆ..
என்ன இது.. வெறும் நம்பர்ஸா இருக்கு. அதும் ஆர்டரே இல்லாம.. வருசையா.. இத எதுக்கு இப்படி எழுதனும் இவங்க..
சரி.. இந்த நோட்ட பர்ஸ்ட் போட்டோ எடுத்து வச்சுரனும்.. இல்லாடி மேம் எழுந்தா வம்பா போயிடும்..
இத தயா தேவி ட்ட காமிச்சா எதாவது துப்பு கிடைக்கும்..
அகழ்யா :"என்னம்மா.. போட்டோ எடுத்துட்டு இருக்க. நல்ல கூட்டத்த சேந்தவனு சொன்ன? "
அருந்ததி :" இல்ல. இத என்னனு எனக்கு புரில.. அதான் போட்டோ எடுத்து ஃப்ரண்டு ட கொடுத்த அவங்க எதாவது கண்டுபிடிப்பாங்க.. "
தரண்யா :" ஐய்ய இதுக்கு எதுக்கு இம்மா யோசிக்குற?? அது எழுந்ததும் கேளு சொல்லுட்டு போவ போகுது"
அருந்ததி :"ஐயோ. அவங்களுக்கே இது தெரிய கூடாது மா. தப்பா நினைக்காதீங்க. அவங்களாவே சரண்டர் ஆகிற்காங்க. அவங்க நினைச்சுருந்தா... அவங்க பண்ண நல்ல காரியத்துக்கும். அவங்களுக்கு தெரிஞ்ச ஆளுங்கள வச்சு இந்த கேஸ்ல சம்பந்த படாமலே ஒதிங்கிருக்கலாம். ஆனா தானா முன் வந்துருக்காங்க. யாரு என்ன எப்படி கேட்டாலும். வெளிய வர முயற்சி செய்ய மாட்றாங்க. அப்படி இருக்கும் போது. எப்படி சொல்லுவாங்க?? அதான்.. "
தரண்யா :" நீ சொல்றதும் சரி தான்...எவ்ளோ அதிகாரி பேசி வெளிய கொண்டு வர பாத்தாங்க. ஒன்னுதுக்கும் பிடி படல.. நாங்க இத பத்தி சொல்லல சரியா.. இந்த புள்ள வெளிய போய் சந்தோஷமா இருந்தா சரி தான்.. "
அருந்ததி :" ரொம்ப நன்றி மா"
அகழ்யா :" நன்றி எல்லாம் வேணாம்.. வெளிய எங்க புள்ள வேற ஒருத்தரோட ஆதரவுல. இந்த பொண்ணு நடத்துற இண்ஸ்டிடூஷன் கொடுக்குற உதவி தொகையில தான் படிக்குது. அதுக்கு உன்ன மாதிரி டாக்டர் ஆனும் னு ஆசை.. அத போய் அப்ப அப்ப பாக்குறியா.. அட்றஸ் தரேன். ??"
அருந்ததி :" கண்டிப்பா மா "
இங்க இருக்க கைதிங்க எல்லாருமே சுவாதி மேம்க்கு அவ்ளோ சப்போர்ட்டா இருக்காங்க.. எஅ
YOU ARE READING
விழித்திரு கண்ணம்மா
Humorஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் பாரதி காண துடித்த கண்ணம்மா உள்ளாள், அவள் எழுந்தால் பிரபஞ்சத்திற்கு பயந்து ஒழிய அவசியம் இல்லை, பிரபஞ்சத்திற்கு கற்று தருவாள் பயம் என்பதை....