#சுவாதி கூற்று
காமினி மேம் வந்ததும் மேம் மிரட்டி கொஞ்சம் பேச வச்சோம்!
வார்டன்:"நா திண்டுக்கல் பக்கதுல உள்ள சின்ன கிராமத்துல இருந்தேன்! என் புருஷன் இறந்த அப்றம் எனக்கு அவரோட ப்ரண்டு சென்னைல வேளை வாங்கி தரேனு கூப்டாறு! எனக்கு இருக்குறது ஒரே பொண்ணு! அவளுக்காக நா வேளைக்கு வர ஒத்துகிட்டு வந்தேன்! என் புள்ளையயும் படிக்க வைக்கிறேனு சொன்னாங்க நம்பி இந்த வேளைக்கு வந்தேன்! என் பொண்ணு எங்க படிக்குறானு கூட தெரியாது! முதல ஏதோ ஒரு பேக்ட் பவுடர் கொடுத்து என்ன ஒரு பொண்ணுட்ட தர சொன்னாங்க! புரில அப்றம் தான் எல்லாம் தெரிஞ்சது! நா ஒத்துக்கல, அதனால என் பொண்ண இந்த மாறி மாத்திருவேனு சொன்னாங்க! வேற வழி தெர்ல அதான்!!"
காமினி:"ம்! அப்ப உன் பொண்ணு பத்தினியா இருக்கனும் ஊர்ல உள்ள பொண்ணுங்க எல்லாம் சீரழிஞ்சா பரவால??"
ஒரே அடி!
சுவாதி:" மேம்! "
காமினி:" என்ன சுவாதி? இப்படி பண்ணவல எல்லாம் சும்மா விடக்கூடாது! "
எனக்கு என்ன சொல்றதுனு தெர்ல
சுவாதி:" சரி இதுக்கு பின்னாடி யார் யாரெல்லாம் இருக்கா!!எத்தன இங்க இருந்து அனுப்புற பொண்ணுங்கள யார் யார் கட்டாய படுத்துவா?? "
வார்டன்:"முதல ஒரு பொண்ண அவங்க செலக்ட் பண்ணுவாங்க, அந்த பொண்ணுட்ட பேசி நா சொல்ற வழிக்கு மாத்துன அப்பறம் கேட்டு பாத்து ஒத்து வந்தா அப்படியே கண்ண கட்டி அனுப்புவோம்! இல்லனா மருந்து கொடுத்து அனுப்புவோம்! சில பேர் மத்தவங்களுக்கு பண்ற சலுகை எல்லாம் பாத்துட்டு இதுக்கு தானா ஒத்து வருவாங்க! "
காமினி :" ம் என்னன்ன வேளை எல்லாம் பண்ணிற்க நீ?? நீயும் ஒரு பொம்பள தானே?? புத்தி மனசாட்சி எல்லாம் இருக்கா??"
ஐய்யோ இவங்க என்ன இப்படி கத்தறாங்க!!
சுவாதி :" மேம்! அமைதியா! அப்றம் எல்லாம் வேஸ்ட் ஆகிடும்,,"
அமைதியா அவங்க ஸ்டேட்மெண்ட், அப்றம் போத மருந்து, எல்லாம் போட்டோ எடுத்து, அத அப்பவே ஹை கோர்ட்டுக்கு அனுப்பிட்டேன்!! அந்த பொண்ண விட்டுடு அந்த வார்டனோட பொண்ணுட்ட பேச வைக்க அந்த மேனேச்மெண்ட் ஆளு வருவான்!
YOU ARE READING
விழித்திரு கண்ணம்மா
Humorஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் பாரதி காண துடித்த கண்ணம்மா உள்ளாள், அவள் எழுந்தால் பிரபஞ்சத்திற்கு பயந்து ஒழிய அவசியம் இல்லை, பிரபஞ்சத்திற்கு கற்று தருவாள் பயம் என்பதை....