36.

80 1 0
                                    

ஆதவ் :" ஆமா தேவி..  அன்னைக்கு எனக்கு வாய்ஸ் மெசேஜ் ல ஜான்சி பேசினா..  எனக்கு ஆபத்து..என் ஹஸ்பண்டே அவரோட ப்ரண்ட்ஸ் வச்சு என்னைய செக்ஸ் டார்ச்சர் பண்றாரு.. என்ன காப்பாது னு"

தேவி :"இத என்ட ஏன் அப்பவே சொல்ல ல?? "

ஆதவ் :" அன்னைக்கு உனக்கு போன் ட்ரை பண்ணா..  உனக்கு லைன் கிடைக்கல..  நீ ஊர்ல இருந்த..  என் அப்பா அம்மா னு எல்லாரும் ஊருக்கு வந்துட்டாங்க..  எனக்கு அந்த டென்ஷன் ல என்ன பண்றது னு தெர்ல..  அவள காப்பத்த ஓடிட்டேன்..  இங்க ஆகாஷ் ட சொல்லி உங்கள்ட சொல்ல சொன்னேன்..  அந்த ராஸ்கல் தான் உன்ட சொல்லாம விட்டுடான்.. "

வாட்??

தேவி :" என்ன சொல்ற???  ஆகாஷ் வந்து சொன்னதே வேற... "

ஆதவ் :"ஆமா..  அவன் உங்க  எல்லார்டையும் நா அவள பாக்க ஃபாரின் போய்டேன் இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல னு சொல்லி எல்லாரையும் ஏமாத்திருக்கான்..  பாஸ்டர்..  அவன் உன்ன ஒன் சைட்டா லவ் பண்ணிர்கான்.. "

தேவி :" ஆமா என்ட ப்ரோபோஸ் பண்ணான்..  நா அக்ஸப்ட் பண்ணல னு அவன் என் மேல..  என் மேல.. "

என்னால சொல்ல முடில..  நாக்கு வறண்டு போச்சே..

ஆதவ் :"தெரியும் ஆசிட் அடிக்க ட்ரை பண்ணா..  தயா இருந்ததால நீ தப்பிச்சுட்ட..  அவன் ஊத்த வந்த ஆசிட் அவன் மேலயே பட்டு..  அவன் முகம் காட்ட முடியாம இருக்கான்..  எனக்கு தயா எல்லாம் சொல்லிடாரு.. "

கண்ணில் பொங்கி வந்த கண்ணீர் ததும்பி விழ...நான் இருக்கிறேன் என்று ஒரு கணம்..  ஒரு கரம் என் தோல் பிடிக்க.. அறிந்தேன்.. 

எத்தனை நாள் ஏங்கிய பிடி.. காற்றில் நான் தேடிய பிடி.. என் ஆதவ்வின் கை பிடி..

இருவரும் உலகம் மறக்க இறுக்கி நின்றோம்..  பல நாள் பிரிந்த தாகங்கள் யாவும் தீர..

ஏதோ நினைத்த நான் சட்டென விலகி.. 

தேவி :" முழுசா சொல்லு ஜான்சி விஷயத்த"

ஆதவ் :" நா அங்க எனக்கு  தெரிஞ்ச ப்ரண்ட் வச்சு அங்க போலிஸோட போய் அவள மீட்டெடுத்து.. அவ சைக்கலாஜிக்கா அபக்ட் ஆகிற்கா னு.  அங்க ட்ரீட்மெண்ட் பண்ணி சரி பண்ணி இங்க வந்தா..  இங்க என்ன என்னவோ ஆகிற்கு.. "

தேவி :" ஆனா. ஏன் அவ ஹஸ்பண்டே இப்படி டார்ச்சர் குடுத்துருக்காரு?? "

ஆதவ் :"எல்லாம் வெறி பிடிச்ச நாய் தேவி..  அவன் நிறையா ஜான்சிக்கு தெரியாம நிறைய பொண்ணுங்களோட தொடர்பு வச்சுருக்கான்..  வசமா ஒரு தடவ மாட்டவும்..  ஜான்சி அவன விட்டு போறதா சொல்லிருக்கா..  ஜான்சி போயிட்டா அவன் ப்ளான் பண்ண மாதிரி ஜான்சி ஓட அப்பா சொத்து அவனுக்கு வராம போய்டும் னு நினைச்சு..  அவன் ப்ரண்ட்ஸ்ஸ வச்சு இப்படி பண்ணிற்கான்.. "

தேவி :"அடக்கடவுளே..  என்ன விஷயம்னாலும் என்ன பிரச்சினைனாலும்..  எதிர்ல நிக்குறது பெண்ணா இருந்தா..  அவளை உடலுறவு மூலமா தான் தாக்கனுமா??  ஏன் இந்த ஆண் வர்கம் இப்படி இருக்கு..?? "

தயா :" எல்லாம் நம்ம சமூக கட்டமைப்பு தேவி.. முதல் முதல்ல ஒரு பெண்ணுக்கு உடல்ல மாற்றம் ஏற்பட்டு உதிரம் கொட்டும்போது ஊர் அறிய அவள உக்கார வச்சு அவள கூனி குறுகி போக வைக்குது.. .. அதே மாதிரி ஆண் உடல்லயும் மாற்றம் வந்து அதை ஊரு அறிய அவனையும் அந்த மாதிரி பண்ணிருந்தா தானே அவனுக்கு அதோட வழி எல்லாம் புரியும்??? "

ஜான்சி :"என்ன ஆதவ்..??  இஸ் எவ்ரிதிங் ஓகே?? "

ஆதவ் :" எஸ் ஓகே "

தேவி :"சாரி ஜான்சி. நா தப்பா புரிஞ்சுட்டேன்... "

ஜான்சி :"இட்ஸ் ஓகே..  இப்போ நாம எல்லாரும் கொஞ்சம் பக்கதுல காபி ஸாப்க்கு போலமா.. நிறைய பேச வேண்டியிருக்கு.. ??"

விழித்திரு கண்ணம்மாDonde viven las historias. Descúbrelo ahora