அந்த உயர் ரக வெளிநாட்டு இறக்குமதி கார் புழுதியை பறக்க விட்டுக்கொண்டு ஜல்லிக்கட்டு காளையைப் போல சீறிக்கொண்டு வந்துகொண்டிருந்தது.
காரின் உள்ளே சென்ற வாரம் வெளியான புதிய ஆங்கில படம் ஓடிக்கொண்டிருந்தது.
அந்த மகிழுந்தின் உள்ளே மொத்தம் நான்கு பேர் இருந்தனர்.அவர்களின் தோற்றத்திலேயே அவர்கள் நவ நாகரிக இளைஞர்கள் என்பது தெரிந்தது.
"டேய் மச்சி நம்ம ராம் சொன்னபோது கூட நான் நம்பிக்கை இல்லாமதான்டா இருந்தேன் ஆனா இப்ப நம்பரேன்டா எவ்வளவு அழகா இருக்கு இந்த கிராமம்" என்று சிலாகித்து கூறினான் ஜீவா.
"நான்தான் சொன்னேன்ல எங்க ஊரு சூப்பரா இருக்கும்னு நீங்கதான் கிராமத்துல நெட் கிடைக்காது, ஸ்னாப்சாட் யூஸ் பண்ண முடியாது,வாட்ஸாப் செய்ய முடியாதுனு உயிர வாங்கிட்டிங்க. இப்போ பாருங்க ட்யூட்ஸ் எங்க ஊரின் அழகை" என்று கூறி நண்பர்களிடம தன் ஊரின் பெருமையே நூற்றி எட்டாவது முறையாக கூறினான் ராம்.
"சரி சரி இப்ப என்ன உங்க ஊருக்கு வராமயா போய்ட்டோம் .ஏதோ ஆசைப்பட்டு கூப்பிட்டன்னு வந்துட்டோம்ல. நான்லாம் வந்தது உன் ஊருக்குதான்டா பெருமை என் எருமை “ என்று கூறி ராமினை வம்பிற்கு இழுத்தான் பாலா .
காரை ஓட்டிக்கொண்டிருந்த விஷ்ணு இவர்களின் சம்பாஷணைகளை கேட்டுக்கொண்டு வந்தான். அவனுக்கும் அந்த கிராமிய சூழல் மனதினுள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.
இவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள பிரபலமான கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்தனர்.பயிற்சி மருத்துவர்களாக புகழ்பெற்ற மருத்துவ மனையில் பணிபுரியவிருக்கின்றனர்.
அதற்கு முன் கோடை விடுமுறையை ராமின் சொந்த ஊரான விடையூரில் கழிக்க முடிவெடுத்தனர்.அதன்படி விஷ்ணுவின் காரில் பயணத்தை மேற்கொண்டனர்.அப்பொழுது நடந்த உரையாடல்களைத் தான் நாம் இவ்வளவு நேரம் பார்த்தோம்.

أنت تقرأ
அது மட்டும் ரகசியம்
غموض / إثارةகதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....