அவள் கனவு 01

3.5K 59 4
                                    

நண்பர்களுக்கு வணக்கம் 🙏
இந்த காதல் கதை என்னுடைய முதல் முயற்சி, முடிந்த வரை முகம் சுளிக்க வைக்காமல் எழுதி இருக்கிறேன். ஏதேனும் பிழைகள் இருப்பின் பொறுத்துக் கொண்டு முழு தொகுப்பினையும் படித்து நிறை குறைகளை கூறுமாறு கேட்டுக்கொண்டு கதைக்கு செல்கிறேன்.

மார்கழி இரவில் வானை வண்ணமயமாக்கி நட்சத்திரங்களுக்கு போட்டியாக இரவு பட்டாசு வெடிகள் நிலவை மறைக்கும் அளவிற்கு கண்களுக்கு விருந்து படைத்து கொண்டிருந்தன.

அதற்கு இணையாக வழி நெடுகிலும் வண்ண அலங்கார விளக்குகள் அமைத்து அந்த சுற்றுவட்டாரம் முழுவதும் பார்ப்பதற்கு இரவிலும் பகல் போல் காட்சியளித்து.

அலை அலையாக பெண்கள் தங்கள் கைகளில் பூஜை தட்டங்களை எடுத்துக்கொண்டு ஒளி விளக்கால் அலங்கரிக்கப்பட்ட அந்த கோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அதற்கு முன்னே இளம் காளைகள் பலர் மேள தாளத்துடன் பாரம்பரிய முறையில் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.

இவை அனைத்தையும் காண தூரத்து உறவினர்கள், நண்பர்கள், வேலை தேடி வெளியூர் சென்றவர்கள் என அனைவரும் நாளை வரும் திருவிழாவிற்காக மகிழ்ச்சியோடு காத்துக் கொண்டிருந்தனர்.

இத்தனை நிகழ்விலும் கோவிலுக்கு செல்லாமல் வீட்டு ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு வானத்தை வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தாள் அவள்.

எப்போதும் அழகாக மூன்று பின்னல் போட்ட சிகை இன்று பின்னாமல் காற்றில் பறந்து கொண்டிருந்தது.

என்றுமே அழகாய் பொட்டு வைத்து பொழிவாய் உள்ள நெற்றியில் என்றுமே காணாத கவலை ரேகைகள் தென்பட்டது.

கொஞ்சும் கண்களும், குழந்தை முகமும் கூட இன்று வறட்சியுற்று வாட்டமாய் இருந்தது. இத்தனையும் தாங்கி கொள்ளாத முழுமதியும் இந்த மதியை பார்த்து மேகங்களுக்கிடையில் மறைந்து கொண்டது.

அவள் கனவுWhere stories live. Discover now