அவள் கனவு 03

1.4K 46 1
                                    

அன்றைய காலை பொழுதில் பனி என்ற வெள்ளைக் குடையில் ஓட்டை விழுந்து கதிரவனின் வெயில் அந்த வீட்டு அறையின் ஜன்னலின் ஊடாக சென்று அந்த அறையை வெளிச்சம் ஆக்கியது.

அந்த ஒளியின் ஸ்பரிசம் தூங்கிக் கொண்டிருந்த அவளின் முகத்தில் பட்டு பௌர்ணமி நிலவு பகலில் மிளிர்வது போன்று பார்ப்பதற்கு அழகாய் இருந்தது.

மேள தாளங்கள் முழங்கியும், பட்டாசு வெடித்தும் ஊரே கொண்டாட்டமாய் இருந்தது.

அவ்வளவு சத்தத்திலும் மதி எனக்கென்ன என்பது போல் உறங்கிக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்திற்கு பின்பு கண்களை லேசாக திறந்து பார்த்தாள்...

கையில் காஃபி கப்புடன் அவளது தந்தை லிங்கம் அமர்ந்து கொண்டிருந்தார்.

குட் மார்னிங்க் பா.. நீங்க ஏன் பா இதெல்லாம் பண்ணிட்டு. அம்மா இல்லையா..

அட.. என் தங்கத்துக்கு நான் பண்ணாம வேற யாரு பண்ணுவாங்க என்று மதியின் தலையை கோதிக் கொண்டே சொன்னார் லிங்கம்.

தேங்கஸ் பா..
தலைவலி என்னடா பண்ணுது..!?

ஹ்ம்ம்.. பரவால பா.. நல்லா இருக்கு..
சரி மா.. குளிச்சிட்டு கோவிலுக்கு போய்ட்டு வந்திடலாம் மதி..

ஊரே திருவிழாவில கொண்டாட்டமா இருக்கு. நீ மட்டும் தான் சோகமா இருக்க.. எதாவது பாத்து பயந்துக்கிட்டியா டா..?

ஏன் பா.. அப்படி கேக்குறிங்க..!?
இல்ல.. தூக்கத்தில பயந்துகிட்டு நடுங்கிட்டு இருந்த அதுதான் மா கேட்டேன்..

ஓ.. அதுவா.. அது ஒரு கெட்ட கனவு பா.. அதான் அப்படி ஆகியிருக்கும்..

என்ன கனவு மதி.?

எங்கயோ ஒரு காட்டுல தனியா போற மாதிரி இருக்கு.. போற வழியெல்லாம் வறண்ட காடு, கல், முள் தான். என்னால நடக்க முடியல..

தூரத்தில மிருகங்களோட சத்தம்.. எனக்கு பயமா ஆகிடுச்சி.. அப்புறம் எங்கயோ இருந்து ஒரு பாட்டி வந்து என்னோட கைய புடிச்சிக்கிட்டு வேகமா ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போகுறாங்க..

அவள் கனவுDonde viven las historias. Descúbrelo ahora