மாலையில் பறவைகள் யாவும் தன் இருப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தது. ஜனக்கூட்டங்கள் அவரவர் வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
இப்போ தான் ரொம்ப சந்தோசமா இருக்கு..
ஏன் மதி.. இவ்வளவு நேரம் இல்லயா..!?
அது வேற.. என்ன தான் இருந்தாலும் நம்ம ஊரோட இயற்கை, இயல்பான வாழ்க்கையெல்லாம் பாக்குற மாதிரி இருக்காது.
நம்ம ஊர் நம்ம ஊர் தான்..
அதுவும் சரிதான் மதி.. அதனால தான் நானும் நியூயார்க்ல இருந்து எப்படா ஊருக்கு வருவோம்னு இருந்தது.
நீங்க வரலன்னா.. இவ்வளவு நல்ல விசயம் நடந்து இருக்குமா..
இதோ கூட வரானே மேகு.. இவன் இல்லன்னா இவ்வளவும் நடந்து இருக்காது.
அட போடா நிரஞ்சா.. நீ முதல்லயே சொல்லி இருந்தா எப்பவோ இந்த பிரச்சனையெல்லாம் முடிஞ்சு இருக்கும்.
எது எப்ப நடக்கனுமோ, அது அப்போ தான் நடக்கும் நண்பா..
இந்த பேச்சுக்கெல்லாம் சாருக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல என்றாள் மதி.
ஏய்.. ரெண்டு பேரும் என்ன ஓட்டுறிங்களா என கூறிவிட்டு சிரித்தான் நிரஞ்சன்.
பின்ன.. பெரிய டெவெலப்பரா இருந்தா மட்டும் போதாது. கொஞ்சமாவது அறிவு இருக்கனும்.
போதும் போதும்... நீங்க ரெண்டு பேரும் நிறுத்துங்க. அதான் எல்லா பிரச்சனையும் முடிஞ்சதே..
நம்ம பிரச்சனை முடிஞ்சது.. அங்க பாருங்க மேகு அண்ணனுக்கு புது பிரச்சனை வந்துட்டு இருக்கு என்றாள் மதி..
மூவரும் அந்த திசையை பார்த்தனர்.
தமிழ்.. வேகமாக எக்ஸ்.எல் பைக்கில் வந்து கொண்டிருந்தாள். வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி மதியை அணைத்துக் கொண்டாள்.
ஏய் மதி.. நல்லா இருக்கியாடி.. என்ன திடீர்னு ஊருக்கு.. சொல்லவே இல்ல..
ஆமா தமிழு.. ரெண்டு நாள் லீவு.. அப்படியே வந்துட்டு போலாம்னு இவர் தான் கூட்டிட்டு வந்தாரு என நிரஞ்சனை கை காட்டினாள் மதி..
YOU ARE READING
அவள் கனவு
Romanceநண்பர்களுக்கு வணக்கம் 🙏 இந்த காதல் கதை என்னுடைய முதல் முயற்சி, முடிந்த வரை முகம் சுளிக்க வைக்காமல் எழுதி இருக்கிறேன். ஏதேனும் பிழைகள் இருப்பின் பொறுத்துக் கொண்டு முழு தொகுப்பினையும் படித்து நிறை குறைகளை கூறுமாறு கேட்டுக்கொண்டு கதைக்கு செல்கிறேன்.