அவள் கனவு 15

903 36 1
                                    

அன்று மதியம் வானிலை பார்ப்பதற்கு மந்தமாய் இருந்தது. அந்த சாலையில் வாகனங்கள் வேகமாக சென்று கொண்டிருந்தன. மிகுந்த யோசனையுடன் அந்த கடையில் நின்று கொண்டு டீ குடித்துக் கொண்டிருந்தான் மேகு.

அவன் முகத்தில் குழப்பம் நிறைந்து தெளிவற்ற நிலையில் இருந்தான். இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையில் மதியின் கல்யாண பேச்சுவார்த்தை அவனுது நம்பிக்கை சற்று சறுக்கிவிட்டது போல் இருந்தது.

மேலும் அதைப் பற்றி தமிழ் தன்னிடம் சண்டை போட்டு வருத்தம் கொண்டதும் அவனுக்கு மேலும் தர்மசங்கடமாக இருந்தது. அதே நேரத்தில் நிரஞ்சன் வேகமாக ஹைதராபாத் சென்றது பிடிக்கவில்லை. இதையெல்லாம் யோசித்துக் கொண்டே டீ குடித்துக் கொண்டிருந்தான் மேகு.

இதே வேளையில் அங்கிருந்து ரவி வேகமாக வந்தான்.

என்ன ரவி என்ன ஆச்சு, எல்லாம் சக்ஸஸ் தானே என்றான் மேகு..?

அண்ணா, நீங்க சொன்ன மாதிரி எல்லாம் பேசிட்சேன். ஆனா எனக்கு ரொம்ப குழப்பமா இருக்குண்ணா என்றான் ரவி.

ஓ.. சரி இங்க எதுவும் பேச வேண்டாம். உன்னோட பைக் எடு போகும்போது பேசிக்கலாம்.

ம்ம்.. சரிண்ணா..

சொல்லு ரவி.. என்ன ஆச்சு..?

அண்ணா.. நீங்க சொன்ன மாதிரி ஒரு வாரத்துக்கு முன்னாடி பத்தாயிரம் ரூபாய் பணத்த பானுவோட அக்கவுண்ட்க்கு டிரான்ஸ்பர் பண்ணேன். முதல்ல பானு அத வேணாம்னு சொன்னா, அப்புறம் நீங்க சொன்ன மாதிரி என்கிட்ட இருந்தா செலவு ஆகிடும். எனக்கு நம்பிக்கையான ஆளு யாரும் இல்ல. நீங்க அக்கவுண்ட்ல வச்சு இருங்க. நா அப்புறமா வாங்கிக்குறேன்னு சொன்னேன்.

நீங்க சொன்ன மாதிரியே அவளும் சரின்னு சொல்லிட்டா.

ஹ்ம்ம்.. அப்புறம் சொல்லு ரவி..

பணம் டிரான்ஸ்பர் பண்ண நாள்ல இருந்து ரெண்டு நாளைக்கு அப்புறம் கால் பண்ணி அவ ரொம்ப கஷ்டத்தில இருக்கிற மாதிரி பேசுனா. நானும் பரவால அந்த பணத்த எடுத்துக்க சொல்லிட்டேன். உங்களுக்கு ஏன் சிரமம் அப்படின்னு பேச ஆரம்பிச்சா. நானும் பரவாலன்னு சொல்லிட்டேன்.

அவள் கனவுWhere stories live. Discover now