அவள் கனவு 13

902 35 0
                                    

அங்க என்ன பண்றிங்க விவசாயி சார்..?

குரலைக் கேட்டு திரும்பினான் மேகு.
அட.. நீ எங்க வீட்ல என்ன பண்ற தமிழு..

சும்மா.. உங்கள பாக்கலாமேனு தான் வந்தேன்.

ஓ.. நம்பிட்டோம்.. வீட்ல என்ன பொய் சொல்லிட்டு வந்த..?

எப்படிங்க..கண்டுபுடிச்சிட்டிங்க..?
அம்மாக்கிட்ட மல்லிகை செடி உங்க வீட்ல இருக்கு, வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டு வந்தேன்.

ஹா ஹா.. அதானே பாத்தேன்..
சரி சரி.. பின்னாடி தோட்டத்தில இருக்கு, போய் எடுத்துக்கோ..

ஹேய் லூசு.. நா உங்ககிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு போலாம்னு வந்தேன். நீங்க என்னடான்னா இப்படி பண்றிங்க. போங்க நா உங்க கிட்ட பேசல..

இப்போ தான் பேச வந்து இருக்கேன்னு சொன்ன, இப்போ பேசலன்னு சொல்ற..

போடா எரும.. என அடித்தாள்..
ஹேய்.. அடிக்காத அப்புறம் உனக்கு தான் வலிக்கும்.

பரவால.. அத நா பாத்துக்குறேன்.

மேடம்.. அதையும் நா தான் பாத்தாகனும்..

அப்பா.. உங்கள பேசி ஜெயிக்க முடியாது பா.. சரி எனக்கு செடி வேணும், எங்க இருக்குன்னு கூட்டிட்டு போங்க.

அப்படியா.. சரி வா என்று குழந்தையை இரண்டு கையில் தூக்குவது போல் அவளை தூக்கிக் கொண்டே தோட்டத்தில் விட்டான்..

அட.. விடுங்க என்னை.. உங்களுக்கு அடி இல்ல..

ஹேய்.. நீ தானே தூக்கிட்டு போக சொன்ன தமிழு..?

ஹலோ.. தூக்கிட்டு போக சொல்லல.. கூட்டிட்டு போக சொன்னேன்.

ஓ.. எனக்கு அப்படி தான் காதுல விழுந்தது டா..

விழும்.. விழும்.. அடி தான் விழும் என அவன் காதை திருகினாள்.

சரி சரி.. உனக்கு எந்த செடி வேணுமோ எடுத்துக்கோ தமிழு..

நீங்களே உங்களுக்கு பிடிச்ச செடிய குடுங்க.. உங்க நியாபகமா நா பத்திரமா பாத்துக்குறேன்.

ஹா ஹா.. இது முழுசும் உன்னோட தோட்டம் தமிழு.. எடுத்துக்க ஒன்னும் இல்ல.. நீ டெய்லி வந்து பாத்துக்கோ..

அவள் கனவுDonde viven las historias. Descúbrelo ahora