ஹலோ தமிழு.. நா மதி பேசுறேன்.. நீ எப்படி இருக்கடி..?
நா நல்லா இருக்கேன் மதி.. நீ நல்லா இருக்கியா..?
உனக்கு ஒர்க்லாம் எப்படி போகுது..?
சாப்பாடு எல்லாம் செட் ஆச்சா..?
ஃப்ரண்ட்ஸ்லாம் கிடச்சாங்களா..?ஹேய்.. போதும் போதும்.. இவ்வளவு கேள்வி ஒண்ணா கேட்டா, நா எப்படி பதில் சொல்றது தமிழு.
ம்ம்.. சரி சொல்லு மதி.. ஒரு வாரம் நடந்தத டக்குன்னு சொல்லு பாக்கலாம்..
ம்ம்.. ட்ரைனிங் மூனு மாசம்னு சொல்லி இருக்காங்க. சோ.. போய்ட்டு இருக்கு. ஒன்னும் பெருசா வேலை இல்ல.
ரூம்ல நிரஞ்சனோட ஃப்ரண்ட்ஸ் நல்லா பாத்துக்குறாங்க. பயப்படுற அளவுக்கு ஒன்னும் இல்ல தமிழு.
ம்ம்.. பரவாலடி.. உடம்ப பாத்துக்கோ.. நல்லா சாப்பிடு மதி..
சரிடி.. நீ என்ன பண்ற..?
உங்க ஆளு என்ன பண்றாரு..?அவரா.. அவரும் உன் ஆளும் சேர்ந்து தினமும் எங்கயோ போய்ட்டு வராங்க. எங்கன்னு தான் தெரியல. ஒரே சஸ்பென்ஸா இருக்கு மதி.
மறுபடியும் என் ஆளுன்னு சொல்லாதடி தமிழு. அதெல்லாம் முடிஞ்சு போய்டுச்சி.
அப்படிதான் சொல்லுவேன். மேகு எனக்கு சொல்லி இருக்காரு, அவரு நினச்சது நடந்தா உனக்கும் நிரஞ்சனுக்கும் கல்யாணம் நடக்கும்னு. நா நம்பிக்கையா தான் இருக்கேன்.
அட போடி. ப்ளீஸ், அதப் பத்தி பேசாத. வீட்ல எப்படி இருக்காங்க..?
அப்பப்போ அம்மா, அப்பாவ பாத்துக்கோடி ப்ளீஸ்..ஹேய் லூசு, இதெல்லாம் நீ சொல்லனுமாடி. நா பாத்துக்குறேன் மதி.
ம்ம்.. தேங்க்ஸ் டி.
இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.
*********மேகு, பானு ரெண்டு நாளா போன் பண்ண டீடைல்ஸ் கிடச்சிடுச்சி.
சூப்பர் டா.. அதர் ஸ்டேட் நம்பர்ஸ் எத்தனை இருக்கு..?
ரெண்டு நம்பர் வந்து இருக்கு.. அதுல ஒண்ணு அவங்க சொந்தக்
காரங்க தான். இன்னொரு நம்பர் தான் வேற யாரோட நம்பர்னு கண்டு புடிக்கனும்.
ESTÁS LEYENDO
அவள் கனவு
Romanceநண்பர்களுக்கு வணக்கம் 🙏 இந்த காதல் கதை என்னுடைய முதல் முயற்சி, முடிந்த வரை முகம் சுளிக்க வைக்காமல் எழுதி இருக்கிறேன். ஏதேனும் பிழைகள் இருப்பின் பொறுத்துக் கொண்டு முழு தொகுப்பினையும் படித்து நிறை குறைகளை கூறுமாறு கேட்டுக்கொண்டு கதைக்கு செல்கிறேன்.