அவள் கனவு 27

886 35 0
                                    

அன்று மதியம் 3 மணி அளவில் அந்த அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. அதனை சுற்றியுள்ள கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி இருப்பது அங்குள்ள எதார்த்தத்தை காட்டியது.

இந்த நேரத்தில் அங்கே, பல இலட்ச ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்று வந்து நின்றது.

வா கார்த்திக்.. சரியான நேரத்தில வந்துட்டிங்க..

ஆமா மா.. எப்படியோ எல்லாம் நல்லபடியா நடந்து இருக்கு, ஆண்டவனுக்கு தான் நன்றி சொல்லனும்.

நல்ல வேளை பண்ணிங்க மேகு, சரியான நேரத்தில இங்க இவங்கள கூட்டிட்டு வந்துட்டிங்க. இல்லன்னா கண்டிப்பா வேற மாதிரி ஆகி இருக்கும்.

நமக்கு நேரம் நல்லா இருக்கு சார், இல்லன்னா இவ்வளவு வேகமா எதுவும் நடக்காது.

இதற்கிடையில் மணியும் அவளது தம்பியும் காரில் இருந்து இறங்கி அவளது தந்தையை கட்டிக் கொண்டனர்.

எப்படி பா இருக்கிங்க.. எங்க போனிங்க, எங்கள விட்டுட்டு எப்படி உங்களால இருக்க முடிஞ்சது.

எல்லாம் உங்க பாதுகாப்புக்கு தான் மா, இன்னைக்கு எல்லாம் சரியாகிடும். இதுக்கு மேல என்னோட பாரம் முழுசா குறைஞ்சிடும்.

போங்க பா.. இனி எங்கள விட்டு எங்கயும் போக கூடாது. எங்க கூடவே தான் இருக்கனும் என கண்ணீருடன் பேசிக்கொண்டிருந்தாள் மணி.

அருகே அவள் அம்மா கௌரி தலை குனிந்து நின்று கொண்டிருந்தார்.

அவரை பார்த்தவுடன் மணி மிகுந்த கோபமடைந்து எள்ளும் கொள்ளுமாக பொறிந்தாள்.

நீ இங்க என்ன பண்ற.. அப்பாவ கொல்ல வந்து இருக்கியா..!?

அவங்கள எதுவும் சொல்லாத மணி என்றார் கார்த்திக் அம்மா. அதற்கு மேல் மணி எதுவும் பேசவில்லை.

வேகமாக ஒருத்தர் அவர்கள் இருக்கும் இடத்திற்கு ஓடி வந்தார்.

எல்லாம் ரெடி தானே என்றான் கார்த்திக்..!?

யெஸ் சார்.. எல்லாம் ரெடி.. நம்ம தான் அடுத்து போகனும்.

அவள் கனவுWhere stories live. Discover now