அண்ணா.. மறுபடியும் கேக்குறேன்.. விளையாடாம உணமைய சொல்லுங்க ப்ளீஸ்..
மதி.. நா உண்மைய தான் சொல்றேன். நா எதுக்கு உன்கிட்ட பொய் சொல்லனும் சொல்லு..
ஏன்.. அவரு என்கிட்ட சொல்லவே இல்ல.. சொல்லி இருந்தா நா எப்பவோ மனச மாத்திருப்பேன் இல்ல..
அது எனக்கு தெரியல மதி. எனக்கே ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் சொன்னான். எனக்கும் ஒரு மாதிரி ஷாக்கா தான் இருந்தது.
என்னை எதுக்கு இப்போ இங்க கூட்டிட்டு வந்திங்க. நா அமைதியா என் வேலைய தானே பாத்துட்டு இருந்தேன்.
இங்க பாரு மதி.. சில உண்மைகள் உனக்கு புரியனும். புரியாம எது செஞ்சாலும் அதுக்கு அர்த்தமே இல்ல. அதனால கொஞ்ச நேரம் வேடிக்கை மட்டும் பாத்துட்டு இரு. அவங்க வராங்க கண்ணை தொடச்சிக்கோ..
சாரி மேகு.. உங்களுக்கு என்ன வேணும்னு கேக்காமலே ஆர்டர் பண்ணிட்டேன்..
பரவால மணி.. திடீர்னு உங்கள பாத்ததே சந்தோசமாவும் ஆச்சர்யமாவும் இருக்கு..
ஆமா.. எனக்கும் ரொம்ப சர்ப்ரைஸா தான் இருந்தது. சாப்பிடுங்க மேகு.. நீங்களும் சாப்பிடுங்க மதி..
அப்புறம் மணி.. காலேஜ் முடிஞ்சதுக்கு அப்புறம் எங்க போனிங்க, என்ன ஆச்சு, ஒரே மர்மமா இருக்கே..
அட.. அப்படிலாம் ஒன்னும் இல்லைங்க, சூழ்நிலை சரியில்ல. எங்கயோ போய் எங்கயோ வந்த மாதிரி இருக்கு.
ஹ்ம்ம்.. நா கூட உங்க ஊர் பானுவோட வீட்டுக்கு போனேங்க. எனக்கு தெரியாது அது அவங்க வீடுன்னு, அப்புறம் அவங்க அப்பா தான் சொன்னாரு அது பானுவோட வீடுன்னு.
ஆமா.. பானு சொன்னா.. என சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள் மணி..
பின்ன.. நீங்க ரெண்டு பேரும் எப்பவுமே ஒன்னா இருப்பிங்களே அப்புறம் எப்படி தெரியாம போகும் என்றான் மேகு..
ஐயயோ.. உளறிட்டனே என திருதிருவென முழித்தாள் மணி..
இல்ல.. நா என்ன சொல்ல வரேன்னா.. என்று சமாளிக்கப் பார்த்தாள் மணி.
BẠN ĐANG ĐỌC
அவள் கனவு
Lãng mạnநண்பர்களுக்கு வணக்கம் 🙏 இந்த காதல் கதை என்னுடைய முதல் முயற்சி, முடிந்த வரை முகம் சுளிக்க வைக்காமல் எழுதி இருக்கிறேன். ஏதேனும் பிழைகள் இருப்பின் பொறுத்துக் கொண்டு முழு தொகுப்பினையும் படித்து நிறை குறைகளை கூறுமாறு கேட்டுக்கொண்டு கதைக்கு செல்கிறேன்.