அவள் கனவு 16

882 34 0
                                    

அன்றைய இரவு பொழுதில் மிதமான குளிரில் மாடியில் நின்று கொண்டு வானில் உள்ள நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தாள் மதி. ஏனோ இன்று அவள் முகம் வாட்டமாக காணப்பட்டது.

சற்று நேரத்திற்கு முன்பு அவள் அம்மாவிடம் தொலைபேசியில் கல்யாணம் வேண்டாம் என பேசி சண்டையிட்டதால் அவள் மனது பாரமாக இருந்தது.

அவ்வளவு தூரம் எடுத்துக் கூறியும் தன் பேச்சை அம்மா கேட்கவில்லை என்பதும் ஒரு காரணம்.

உன்னோட சம்மதம் இல்லாம எதும் பண்ண மாட்டேன்னு தன் அப்பா சொன்னது மனதிற்கு கொஞ்சம் ஆறுதல் அளித்தது.

ஆனாலும் அம்மா ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை கட்டாயம் நடத்தாமல் விட மாட்டார் எனவும் நொந்து கொண்டாள்.

என்ன வாழ்க்கை டா இது.. எது வேணாம்னு நினக்குறமோ அது தான் முதல்ல நடக்குது என புலம்பிக் கொண்டிருந்தாள் மதி.

அப்படி என்ன பாத்துட்டு இருக்க மதி எனறாள் ஜெயஸ்ரீ.

சும்மா.. வானத்த பாத்துட்டு இருக்கங்க..

பேர் சொல்லி கூப்பிடு மதி. உனக்கும் எனக்கும் அவ்வளவு வயசு வித்தியாசம் இல்ல.

ம்ம்.. சரி ஜெயா.. ஓகே வா..?

ஹா ஹா.. சூப்பர்.. இப்படி தான் இனிமேல் கூப்பிடனும் மதி..

ம்ம்.. ஜெயா..

சரி என்ன அப்படி யோசிச்சிட்டு இருக்க..?
சொல்லலாமே..?

அது ஒன்னும் இல்லைங்க.. வீட்ல கல்யாண பேச்சுவார்த்தை போய்ட்டு இருக்கு. எனக்கு அது பிடிக்கல, அதனால வீட்ல அம்மா கூட சண்டை. அதான் மனசு சரியில்லன்னு மேல வந்தேன்.

ஓ.. அவங்க கடமைய சீக்கிரம் முடிக்கனும்னு நினைக்குறாங்க போல மதி.

ம்ம்.. இருந்தாலும் இப்போ தானே வேலைக்கு வந்தேன். அதுக்குள்ள கல்யாணம்னா எப்படி ஜெயா.

நீ என்ன சொன்ன..?

நா.. இப்போதைக்கு கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டேன். ஒரு வருசம் ஆகட்டும்னு சொன்னேன். ஆனா அவங்க பரவால இப்போ பேசி வச்சிடலாம் ஒரு வருசத்துக்கு அப்புறம் கல்யாணம் வச்சுக்கலாம்னு சொல்றாங்க. அதான் என்ன பண்றதுன்னு தெரியல.

அவள் கனவுTempat cerita menjadi hidup. Temukan sekarang