அவள் கனவு 08

1.1K 39 1
                                    

கீழே இருந்து பார்ப்பதற்கு அந்த மலை அந்த ஊரின் தடுப்புச் சுவர் போல் அமைந்திருக்கும். வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் சாயம் பூசப்பட்டு படிகட்டுகள் வளைந்தும் நெளிந்தும் செல்வது அழகாய் இருக்கும்.

அதன் உச்சியில் உள்ள முருகனை தரிசிக்க காலை மற்றும் மாலை நேரங்களில் மக்கள் செல்வது வழக்கம்.

கோவில் பின்புறம் உள்ள மண்டபத்தின் அடியில் இருவர் பேசிக்கொண்டிருந்தனர்.

என்ன மச்சி.. மதிய கோவிலுக்கு வர சொல்லிட்டியா..?

மதியம் மெசேஜ் பண்ணேன் மேகு.. சாய்ங்காலம் கோவிலுக்கு வர சொல்லி..

மதி எதும் கேக்கலையா..?
எதும் கேக்கல.. வரேன்னு மட்டும் சொன்னா..

சரி நிரஞ்சா.. இன்னைக்கு சரியா பேசிடு.. அவளோட வாழ்க்கைய அவ பாக்கட்டும். இல்ல உனக்கு மதிய புடிச்சு இருக்குன்னா கல்யாணம் பண்ணிக்கோ.. நல்ல பொண்ணு டா..

மதிய பிடிக்காதுன்னு நா சொல்ல வரல.. ஆனா நா இதுவர அப்படி நினச்சது இல்ல மேகு.. அதுவே எனக்கு மண்டைய பிச்சுக்குது..

நா ஒன்னு சொல்லட்டுமா மச்சி..
சொல்லு மேகு..

உன்னோட பிரச்சனை வேறன்னு நினைக்குறேன்.. வேற ஏதோ இருக்கு... அதனால தான் இவ்வளவு குழப்பம் உனக்கு..

சிறிது நேரம் மேகுவை உற்றுப் பார்த்தான் நிரஞ்சன்..
ம்ம்ம்.. பெருமூச்சோடு நிரஞ்சன் பேச ஆரம்பித்தான்..

ஆமா மேகு.. நா ரொம்ப குழப்பத்துல தான் இருக்கேன். அது விளங்குற வர எந்த முடிவும் ஒழுங்கா எடுக்க முடியாது..

சரி சொல்லுடா நிரஞ்சா.. சொன்னா தானே எதோ ஒரு விடை கிடைக்கும்..

ம்ம்ம்..

உனக்கு மணிமேகலை தெரியுமா மேகு..
யாருடா அது..?
நம்ம ஊரா..?

இல்ல டா.. நம்ம காலேஜ் படிக்கும் போது நம்ம கிளாஸ் மணிமேகலை..

ஓ ஆமா.. டைரக்ட் செகண்ட் இயர் ஸ்டுடெண்ட்.. செம டேலண்ட் ஆச்சே.. ப்ரோக்ராம், கோடிங்ல செமையா பண்ணுமே அந்த பொண்ணா..?

அவள் கனவுDonde viven las historias. Descúbrelo ahora