அவள் கனவு 25

885 33 0
                                    

என்றும் இல்லாத மகிழ்ச்சியும், ஆனந்தமும் அவன் மனதில் காண முடிந்தது. அதனால் அவன் முகமே பார்ப்பதற்கு பிரகாசமாக இருந்தது. வாழ்வில் எதுமே ஒரு பிம்பம் தான். அந்த பிம்பத்தை தேவையில்லாமல் கலைக்க நினைக்கும் போதுதான் மனம் கலக்கம் அடைகிறது. இவ்வாறு யோசித்துக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.

டேய் நிரஞ்சா.. டீ குடிடா.. ஆறிடப் போகுது என அம்மா சொல்லவே சுய நினைவுக்கு வந்தான்.

ஹ்ம்ம்.. என டீயை வாங்கிக் குடித்தான் நிரஞ்சன்.

என்னடா முகம் பாக்கவே கலையா இருக்கு. என் பையனுக்கு கல்யாண கலை வந்துடுச்சி.

அட ஏன் மா நீ வேற.. எப்போ பாத்தாலும் உனக்கு அதே நினப்பு தானா..!?

தேவையில்லாம பேசி அந்த பொண்ணு குடும்பத்த குழப்பாதம்மா..

அட போடா.. அவங்ககிட்ட அப்பா அன்னைக்கே அந்த சம்மந்தம் வேணாம்னு சொல்லிட்டாரு. எல்லாம் உன்னால தான்.

ம்ம்.. நல்ல வேலை பண்ணி இருக்காரு அப்பா..

அட போடா.. எப்போ தான் கல்யாணம் பண்ணிம்கலாம்னு இருக்கியோ..!?

ஹா ஹா.. பொண்ணு புடிக்கனும் இல்லமா.. பொறுமையா பண்ணிக்கலாம்.

என்னமோ டா.. உன்ன புரிஞ்சிக்கவே முடியல டா.

என்ன மா.. உன் பையன் ரொம்ப சந்தோசமா இருக்கான். பாத்தாவே தெரியுதே என்றாள் ரேணு..

ஆமா.. நா ரொம்ப சந்தோசமா இருகேன் ரேணு..

டேய் அண்ணா.. எங்கக்கிட்ட சொன்னா நாங்களும் சந்தோசப் படுவோம் இல்ல.

சொல்லிட்டா போச்சு..

ம்ம்.. சொல்லு.. சொல்லு..

உனக்கு மாப்ள பாத்தாச்சு ரேணு..!!

அட போடா எரும மாடு.. நா கூட வேற எதாவதுன்னு நினச்சுட்டேன்.

அதெல்லாம் நேரம் வரும்போது சொல்றேன், போய் வேலைய பாரு..

போடா.. நா கீழ போறேன்னு கிளம்பினாள் ரேணு.

ஏன் டா நிரஞ்சா.. சொல்லுடா.. பொண்ணு எதாவது பாத்து வச்சு இருக்கியா..!?

அவள் கனவுWhere stories live. Discover now