ஹலோ விவசாயி சார்.. எங்க போறிங்க.. இங்க நாங்க இருக்குறது கண்ணுக்கு தெரியல..?
இல்ல.. அந்த பக்கம் வாஸ்து சரியில்ல.. கோவில்ல பொங்கல் தராங்கலாம் வாங்கிட்டு வரேன்..
இன்னும் கோவிலே திறக்கல சார்.. ரொம்ப நடிக்காதிங்க..
சரி சரி.. சொல்லு.. என்ன..?
அவங்கள பாத்திங்களா.. எப்படி பேசிட்டு இருக்காங்கன்னு.. நீங்களும் தான் இருக்கிங்களே.. வேஸ்ட்..ஓய்.. அவங்க வேற விசயமா பேச வந்து இருக்காங்க.. இன்னைக்கு எல்லா பிரச்சனைக்கும் ஒரு முடிவு கிடச்சிடும்..
ஏங்க.. நீங்க அவர் ஃப்ரண்ட் தானே.. மதி நிரஞ்சன எவ்வளவு லவ் பண்றான்னு தெரியமா..?
நீங்க சொல்லக் கூடாது அவருக்கு.. நீங்க சொன்னா கண்டிப்பா கேப்பாருங்க..
மேடம்.. எனக்கும் தெரியும்.. நானும் மதிய கல்யாணம் பண்ணிக்க சொல்லிட்டேன்.. அவன் இப்போ ரொம்ப குழப்பமா இருக்கான்.. அவன கொஞ்ச நாள் ஃப்ரீயா விடுறது தான் சரி..
ஏன்.. அவருக்கு என்ன பிரச்சனை.. நல்லா தானே இருக்காரு.. சமாளிக்காதிங்க..
சரி விடு.. அவங்க என்ன தான் பண்றாங்கனு பாக்கலாம்..
ம்ம்..
*******சொல்லுங்க.. கோவிலுக்கு வர சொல்லிட்டு அமைதியா இருந்தா எப்படி..?
சாப்ட்டியா மதி..?
ம்ம்.. நீங்க..?
நானும் சாப்பிட்டேன்..சரி சொல்லுங்க..
மதி.. என்னை வீட்ல கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க..ம்ம்.. தெரியும்..
தெரியுமா..?.. எப்படி..?
அப்பா சொன்னாங்க..ஓ.. சரி.. எனக்கு இந்த கல்யாணத்தில விருப்பம் இல்ல..
ஏன்..?நா பேசி முடிச்சுடுறேன் மதி..
ம்ம்..என்னால இப்போதைக்கு யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது.. அது யாரா இருந்தாலும் சரி.. எனக்கு சில கமிட்மெண்ட்ஸ் இருக்கு.. அத நா முடிச்சாகனும்.. சோ.. நா வீட்ல வேணாம்னு சொல்ல போறேன்..
சோ.. நீயும்..
புரியுதுங்க..இல்ல மதி.. நா என்ன சொல்ல வரேன்னா..!!
அட விடுங்க.. எனக்கு புரியுது.. எனக்கு எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்ல..
VOCÊ ESTÁ LENDO
அவள் கனவு
Romanceநண்பர்களுக்கு வணக்கம் 🙏 இந்த காதல் கதை என்னுடைய முதல் முயற்சி, முடிந்த வரை முகம் சுளிக்க வைக்காமல் எழுதி இருக்கிறேன். ஏதேனும் பிழைகள் இருப்பின் பொறுத்துக் கொண்டு முழு தொகுப்பினையும் படித்து நிறை குறைகளை கூறுமாறு கேட்டுக்கொண்டு கதைக்கு செல்கிறேன்.