அதிகாலை நேரம் இதமான குளிரில் அந்த ஊரை சார்ந்த சிலர் நடைபயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சாலையில் உள்ள டீ கடையில் சிலர் பேசிக்கொண்டும் டீ அருந்திக் கொண்டும் இருந்தனர்.
இந்நேரத்தில் நிரஞ்சன் வீட்டில் அவனை சென்னைக்கு வழி அனுப்ப அனைவரும் ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.
டேய் நிரஞ்சா.. இப்போ சென்னைக்கு போயே ஆகனுமா டா. இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போலாம் இல்ல அமுதா கண் கலங்கிக் கொண்டே கூறினார்.
அம்மா.. கவல படாத.. இனிமேல் வாரம் ஒருமுறை வந்துடுவேன். என்னால உங்களையெல்லாம் பாக்காம இருக்க முடியாது.
என்னமோ போடா.. எனக்கு மனசே சரி இல்ல.
ஏய் அமுதா.. பையன் ஊருக்கு போறான், அவன்கிட்ட போய் அழுதுகிட்டு. சும்மா இரு என அதட்டினார் ராஜவேல்.
அட ஏன் மா அழுகுற.. இந்த எரும தான் அடிக்கடி வரேன்னு சொல்றான் இல்ல. இவனுக்கு இவ்வளவு சீன்லாம் தேவை இல்ல. போய் வேலைய பாருமா.
ஏய்.. ரேணு எரும.. கவல படாத.. உன்னோட கல்யாணத்துக்கு பத்தி நாள் லீவ் போட வேண்டியது தான். அப்பா கிட்ட சொல்லி சீக்கிரம் பண்ண சொல்லனும்.
டேய் போடா.. நான்லாம் இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். அப்பா இவன அமைதியா ஊருக்கு போக சொல்லுங்க பா..
ஹா ஹா.. சரி சரி... பாத்து பத்திரமா போய்ட்டு வா தம்பி..
ஹ்ம்ம்.. சரிங்க பா.. நா பாத்துக்குறேன்.
மேகுவின் வண்டி சத்தம் வெளியே கேட்டது.
அடடே மேகு வந்துட்டான் போல.. வாங்க போலாம். எல்லோரும் வெளியே வந்தனர்.
சரி.. நா போய்ட்டு வரேன். வர வாரம் வர ட்ரை பண்றேன் என கூறி விட்டு விடைபெற்றான் நிரஞ்சன்.
சரி நிரஞ்சா.. சொன்னது நியாபகம் இருக்கட்டும். நா உனக்கு கால் பண்றேன், சொல்ற இடத்துக்கு வந்திடு.
கண்டிப்பா மேகு.. உன்ன நம்பி தான் போறேன். உன்னோட போனுக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பேன்.
YOU ARE READING
அவள் கனவு
Romanceநண்பர்களுக்கு வணக்கம் 🙏 இந்த காதல் கதை என்னுடைய முதல் முயற்சி, முடிந்த வரை முகம் சுளிக்க வைக்காமல் எழுதி இருக்கிறேன். ஏதேனும் பிழைகள் இருப்பின் பொறுத்துக் கொண்டு முழு தொகுப்பினையும் படித்து நிறை குறைகளை கூறுமாறு கேட்டுக்கொண்டு கதைக்கு செல்கிறேன்.