திடீரென ஏற்பட்ட மயக்கத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணி சிறிது நேரத்தில் சகஜ நிலைக்கு திரும்பினாள். சாதாரண மயக்கம் தான் என மருத்துவர் கூறி சில மாத்திரைகளை கொடுத்து அனுப்பினார்.
மணி.. அதுக்கு தான் சொன்னேன் ஒழுங்கா சாப்பிடுன்னு, எங்க கேக்குற.
பாரு இன்னைக்கு மயக்கம் போட்டே விழுந்திட்ட.. நீ ரெண்டு நாளைக்கு நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ டா என கார்த்திக் அன்பாய் கூறிக் கொண்டு இருந்தான்.இல்ல.. திடீர்னு என்ன ஆச்சுன்னு தெரியல.. மயக்கம் வந்துடுச்சி.. நீங்க கவலப் படாதிங்க.. நா பாத்துக்குறேன். நிங்க முதல்ல ஆஃபிஸ் போங்க நா என்னை பாத்துக்குறேன் பா..
சரி டியர்.. பாத்துக்கோ.. நா சீக்கிரமா உன்ன வந்து பாக்குறேன் என கூறிவிட்டு கிளம்பினான் கார்த்திக்.
ஏய் என்ன ஆச்சு மணி, ஏண்டி ஒழுங்கா சாப்பிடலயா என மணியின் அம்மா கௌரி கேட்டார்.
அம்மா.. நீ வேற ஏன் மா.. நா யார பாத்தன்னு சொன்னா நீயே மயக்கம் போட்டு தான் விழுவ..
அப்படி யாரடி பாத்த..!?
"நிரஞ்சன்"
என்ன.. நிரஞ்சனையா.. அந்த பையன் உன்ன பாத்துட்டானா..!?
ஐயோ.. இப்போ எப்படி இந்த கல்யாணம் நடக்கும்..!?பாத்தியா.. உன்னோட கவல உனக்கு என வெறுமையாய் கூறினாள் மணி..
ஹேய் மணி.. என்னடி ஆச்சு உனக்கு.. நல்ல வாழ்க்கைய விட்றாதடி..
அம்மா.. உன்னோட ஆசைக்கெல்லாம் நா ஒன்னும் கார்த்திக்க கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லல..
எனக்கு என்னோட அப்பாவ பாக்கனும், அதுக்கு கார்த்திக் மட்டும் தான் உதவி பண்ண முடியும். அந்த ஒரு காரணத்துக்காக தான் நா என்னோட விருப்பத்த விட்டுட்டு கார்த்திக்க கல்யாணம் பண்ணிக்க் சம்மதிச்சேன்.
அடியேய்.. ஊர் உலகத்துக்கெல்லாம் உங்க அப்பா இறந்துட்டாங்கன்னு தான் தெரியும். நீ இதெல்லாம் வெளிய சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க..
STAI LEGGENDO
அவள் கனவு
Storie d'amoreநண்பர்களுக்கு வணக்கம் 🙏 இந்த காதல் கதை என்னுடைய முதல் முயற்சி, முடிந்த வரை முகம் சுளிக்க வைக்காமல் எழுதி இருக்கிறேன். ஏதேனும் பிழைகள் இருப்பின் பொறுத்துக் கொண்டு முழு தொகுப்பினையும் படித்து நிறை குறைகளை கூறுமாறு கேட்டுக்கொண்டு கதைக்கு செல்கிறேன்.