ஹலோ சார் இருக்காரா..!?
சாரா.. அவர் ரொம்ப பிஸிங்க.. அப்புறமா கால் பண்ணுங்க..
டேய்.. கொன்றுவேன்.. போய் மூனு நாள் ஆச்சு.. ஒரு கால் கூட பண்ணல..
ஹா ஹா.. அதான் நீ தினமும் கால் பண்றியே தமிழு.. அப்புறம் என்ன..!?
அதான் நானும் சொல்றேன்.. நானே தான் கால் பண்றேன்.. நீங்க பண்ண மாட்டிங்களான்னு..!?
அதுவும் இல்லாம காலைல கால் பண்ணேன் கன்னடாவுல நாட் ரீச்சபல்னு சொல்லுது.. சோ.. இப்போ நீங்க கர்நாடகால இருக்கிங்க.. என்கிட்ட பொய் சொல்லிட்டு அங்க போய் இருக்கிங்க இல்லையா சாரே..!
ஆமா மேடம்.. காவிரி பிரச்சனைய தீர்த்து கொடுங்கன்னு கூப்பிட்டாங்க.. அதான் அப்படியே வந்து என்ன ஏதுன்னு பாத்துட்டு போலாம்னு வந்தேன்.
ஓ... இந்த நக்கல் பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல..
மரியாதையா சொல்லு.. எங்க இருக்க நீ..
நானா.. பெங்களூர்ல தான் இருக்கேன்.. ஒரு கல்யாண ஆர்டர்.. அதான் பேசிட்டு போலாம்னு வந்தேன் தமிழு..
என்னமோ பண்ணுங்க.. எப்போ ஊருக்கு வரதா ஐடியா..!?
கவலப்படாத, அநேகமா நாளைக்கு நைட் வந்துடுவேன்னு நினைக்குறேன். வீட்ட பாத்துக்கோ, அம்மாவ பாத்துக்கோ, அப்புறம் உன்னையும் பாத்துக்கோ..
ரொம்ப அக்கறை தான் சாருக்கு என் மேல..
பின்ன நா அக்கறை படாம வேற யாருங்க மேடம் பட போறாங்க..
போதும் போதும்.. சீக்கிரமா வந்து சேருங்க..
ஓகே மேடம்.. நீங்க சொன்னா சரிங்க..
*******சரி வாடா.. மதிய போய் பாத்துட்டு வந்திடலாம் நிரஞ்சா..
டேய் மேகு.. இப்போ முதல்ல மணிய போய் பாக்கனும்.. அப்புறமா மதிய பாக்கலாம்.
மணிய இப்போ பாக்க முடியாது.. இன்னைக்கு ஈவ்னிங் தான் பாக்க முடியும். வா மதிக்கும் இன்னைக்கு லீவ் தான். அப்படியே போய் பேசிட்டு வரலாம். கொஞ்சம் ரிலாக்சா இருக்கும்.
YOU ARE READING
அவள் கனவு
Romanceநண்பர்களுக்கு வணக்கம் 🙏 இந்த காதல் கதை என்னுடைய முதல் முயற்சி, முடிந்த வரை முகம் சுளிக்க வைக்காமல் எழுதி இருக்கிறேன். ஏதேனும் பிழைகள் இருப்பின் பொறுத்துக் கொண்டு முழு தொகுப்பினையும் படித்து நிறை குறைகளை கூறுமாறு கேட்டுக்கொண்டு கதைக்கு செல்கிறேன்.