அன்று மதியம் அந்த நகரமே அமைதியாய் காட்சியளிப்பது போல் இருந்தது நிரஞ்சனுக்கு. மெட்ரோ ரயில் செல்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டு தன் எண்ண ஓட்டங்களை ஆராய்ந்து கொண்டிருந்தான்.
டேய் நிரஞ்சா.. இந்தா டீ சாப்பிடு.. கொஞ்சம் டென்சன் குறையும் என்றான் மேகு..
ம்ம்ம்.. என பெருமூச்சு விட்டு திரும்பி டீயை வாங்கி அருந்தினான் நிரஞ்சன்.
சரி நிரஞ்சா.. அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்க..!?
உன்ன கொலை பண்ணலாம்னு இருக்கேன் டா என முறைத்துக் கொண்டே கூறினான் நிரஞ்சன்.
ஏன் டா.. நா என்ன பண்ணேன்.. உனக்கு நல்லது பண்ணது தப்பாடா.
அதெல்லாம் சரி தான்.. ஆனா உண்மைய மறச்சு பொய் பேசுறது தான் கோவம் வருது..
ஹா ஹா.. டேய்.. விடுடா.. எப்படியோ எல்லா பிரச்சனையும் சரி ஆகிடுச்சு இல்ல. ஃப்ரியா விடு டா..
பிரச்சனையெல்லாம் முடிஞ்சது. என்னோட கேள்விக்கு தான் பதில் கிடைக்கல..
ஹா ஹா.. மணிகிட்ட கேக்க வேண்டியது தானே..?
அவ தான்.. எல்லாம் மேகுக்கு தெரியும்னு சொல்லிட்டாளே..!
ஓஹோ.. என்மேல இருந்த கோவத்த இப்படி திருப்பி விட்டுட்டாளா மணி.. நல்லது..
உனக்கு கண்டிப்பா தெரியும்.. சொல்லு டா மேகு..
ம்ம்.. சொல்றேன்.. எனக்கு தெரிஞ்சத சொல்றேன்..
இங்க பாரு நிரஞ்சா.. இது கொஞ்சம் குழப்பமான விசயம் தான். கொஞ்சம் புரிஞ்சிக்க டிரை பண்ணு..
ம்ம்.. சொல்லு மேகு..
நீ ஆரம்பத்தில சொன்ன இல்ல.. காலேஜ் கடைசி நாள்ல தான் கடைசியா பேசிக்கிட்டோம்னு..
ஆமா டா மேகு.. அதுக்கு என்ன இப்போ..
அன்னைக்கு அவ அவங்க அப்பாவ பத்தி உன்கிட்ட எதாவது சொன்னாளா..?
ஹ்ம்ம்.. ஆமா டா.. அவங்க அப்பா உயிரோட இருக்காரு.. எப்படியாவது காப்பத்தனும்னு சொன்னா..
YOU ARE READING
அவள் கனவு
Romanceநண்பர்களுக்கு வணக்கம் 🙏 இந்த காதல் கதை என்னுடைய முதல் முயற்சி, முடிந்த வரை முகம் சுளிக்க வைக்காமல் எழுதி இருக்கிறேன். ஏதேனும் பிழைகள் இருப்பின் பொறுத்துக் கொண்டு முழு தொகுப்பினையும் படித்து நிறை குறைகளை கூறுமாறு கேட்டுக்கொண்டு கதைக்கு செல்கிறேன்.