மேகங்கள் எல்லாம் கதிரவனை மறைத்து வெயிலை தடுத்து சீதோஷ்ண நிலையை அழகாக்கியது. மெல்லிய காற்று தென்றலாக வீசி மிதமாக குளிர்ச்சியூட்டியது. ஊரே பார்ப்பதற்கு அமைதியாய் இருந்தது. இதெல்லாம் அந்த மலையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான் நிரஞ்சன்.
நம் கண் முன்னே உள்ள சின்ன சின்ன அழகினை ரசிக்கத் தவறிவிட்டு எங்கோ நிம்மதி உள்ளது என்று இன்றைய தலைமுறை அலைந்து கொண்டிருக்கிறது. முடிந்த வரை அடுத்த தலைமுறைக்காவது இதெல்லாம் உணர்த்த வேண்டும் என அந்த திட்டின் மீது கைகளை வைத்துக்கொண்டு கீழே உள்ள ஊரை பார்த்து யோசித்துக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.
திடீரென அவனது கண்களை இரு கைகள் மூடியது. அந்த நொடியில் அவன் அந்த சுகந்தத்தை உணர்ந்து கொண்டான். வேண்டுமென்றே யாரது என கேட்டான்.
பேசவில்லை.
ஓ.. நேகா வா..!?
அந்த கைகள் இன்னும் இறுக்கியது..
ம்ம்.. ஷாலினி யா..?
இப்போது கோவத்தில் ஒரு கை தலையில் கொட்டியது. அவன் இரண்டு கைகளையும் பிடித்து பின்னிருந்து முன்னே குனிந்தான். அந்த உருவம் மூட்டையை போல் அவன் முதுகை ஒட்டி மேலே வந்தது.
ஹேய்... விடுங்க.. விட்டா தலைக்கு மேலயே தூக்கிடுவிங்க போல..
ஹா ஹா.. தூக்கிடுவோம் செல்லம்.. நா தூக்காம வேற யாரு உன்ன தூக்குவாங்கலாம்..
ஹையோ.. ரொம்ப தான் பாசம் பொங்குது..
இனி ரொம்ப பொங்கும் பாரு..
சரி சரி.. வாங்க போய் சாமிய கும்பிட்டு வரலாம். இன்னைக்கு சஷ்டி, முருகன தரிசனம் பண்ணிட்டு வரலாம்.
போலாமே.. வா டார்லிங் என கையை கோர்த்து கொண்டான்.
என்ன இன்னைக்கு மேடம் ரொம்ப சந்தோசமா இருக்கிங்க போல..!?
ஆமா ஆமா.. இன்னைக்கு ரொம்ப சந்தோசமா தான் இருக்கேன். அது கூடிய சீக்கிரம் உங்களுக்கே தெரியும்.
கோவிலினுள் நுழைந்து முருகனை வழிபட்டனர் இருவரும்.
முருகா.. இதே இடத்தில தான் உன்கிட்ட வேண்டிட்டு போனேன். அதுக்கப்புறம் இப்போ தான் உன்ன பாக்குறேன், என்னோட வேண்டுதல நிறைவேத்தி வச்சுட்ட. உயிர் இருக்க வரை உன்ன மறக்கவே மாட்டேன் கந்தா.
YOU ARE READING
அவள் கனவு
Romanceநண்பர்களுக்கு வணக்கம் 🙏 இந்த காதல் கதை என்னுடைய முதல் முயற்சி, முடிந்த வரை முகம் சுளிக்க வைக்காமல் எழுதி இருக்கிறேன். ஏதேனும் பிழைகள் இருப்பின் பொறுத்துக் கொண்டு முழு தொகுப்பினையும் படித்து நிறை குறைகளை கூறுமாறு கேட்டுக்கொண்டு கதைக்கு செல்கிறேன்.