மாலை மங்கிய வேளையில் அந்த குளிர்வூட்டப்பட்ட அறையில் மும்முரமாக கணினியை பார்த்துக்கொண்டிருந்தான் கார்த்திக். அருகில் அவனது உதவியாளரிடம் சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டு விளக்கங்களை அறிந்து கொண்டிருந்தான்.
மே ஐ கம் இன்..
அட.. வா மணி.. நமக்குள்ள எதுக்கு இந்த ஃபார்மலிட்டிஸ்..?
நிலமையை அறிந்த உதவியாளர் வெளியே சென்றார்.
அப்படி என்ன பிஸி.. நா கால் பண்ணா கூட எடுக்கல.. போங்க நா கோவமா இருக்கேன்.
என்ன பண்றது ஈவ்னிங் ஆனா ரிப்போர்ட்ஸ் பாத்து வெரிஃபை பண்ணனும் இல்ல மணி. இந்த நேரத்தில நா யார் காலையும் அட்டண்ட் பண்ண மாட்டேன்னு உனக்கு தெரியாதா.?
இந்த பிசினஸ் மேன்ஸ கல்யாணம் பண்ணிக்கவே கூடாது. எப்போ பாத்தாலும் பிசினஸ் மைண்டாவே இருப்பாங்க.
ஹா ஹா.. அதெல்லாம் நா உன்ன ப்ரப்போஸ் பண்றதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கனும் டியர்.
இப்பவும் எனக்கு கனவா தான் இருக்கு. ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படுறிங்க. நா ஒன்னும் உங்க அளவுக்கு அவ்வளவு பெரிய பணக்காரி இல்ல கார்த்திக்.
நா பணத்த பாத்து உன்கிட்ட பழகல மணி. உன்னோட எதார்த்தம் தான் எனக்கு புடிச்சது. அது இல்லாம நீ கடையில அக்கவுண்ட்ஸ் பாக்குறதுல ரொம்ப டேலண்ட் வேற.
ஓ.. உங்களுக்கு வேலைக்கு ஆள் வேணும்னு தான் கல்யாணம் பண்ணிக்கிறிங்களா சார்.
அப்படி சொல்லல மணி.. உன்னோட அந்த இன்னொசென்ட் எனக்கு ரொம்ப பிடிக்கும். எப்பவுமே அமைதியா சோகமாவே இருப்ப அதுவும் கூட எனக்கு புடிச்சு இருக்கலாம்.
போதும் பா.. ஜில்லுன்னு இருக்கு..
நா ஏற்கனவே உங்ககிட்ட சொல்லி இருக்கேனே எனக்கு ஒரு பாஸ்ட் லவ் இருந்ததுன்னு. அத கேட்டதுக்கு அப்புறம் கூட கல்யாணம் பண்ணிக்க எப்படி ஒத்துக்குறிங்க..?
இங்க பாரு மணி.. எனக்கு அந்த விளக்கம் எல்லாம் தேவை இல்ல. எனக்கு உன்னோட விருப்பம் மட்டும் போதும். தேவையில்லாம மனச போட்டு குழப்பிக்காத டியர்.
YOU ARE READING
அவள் கனவு
Romanceநண்பர்களுக்கு வணக்கம் 🙏 இந்த காதல் கதை என்னுடைய முதல் முயற்சி, முடிந்த வரை முகம் சுளிக்க வைக்காமல் எழுதி இருக்கிறேன். ஏதேனும் பிழைகள் இருப்பின் பொறுத்துக் கொண்டு முழு தொகுப்பினையும் படித்து நிறை குறைகளை கூறுமாறு கேட்டுக்கொண்டு கதைக்கு செல்கிறேன்.