மேகங்கள் எல்லாம் கூடி கதிரவனை மறைத்ததால் வெயில் மறைந்து குளுமையான நிழலை ஏற்படுத்தியது. அவை ஒன்றுக்கொன்று மோதியதால் ஏற்பட்ட இடி சத்தம் மழை வருவதற்கான அறிகுறியை காட்டியது.
மறுபுறம் அதற்கு இணையாக கோவிலில் மேள தாள முழக்கங்கள் விண்ணை முட்டியது.
இவ்விரண்டு சத்தங்களை தவிர மேலும் இரண்டு பேரின் மனச் சத்தங்களும் குமுறலாய் மனதினுள் இடி போல் இறங்கிக் கொண்டிருந்தது.
மதி ஏன் பெங்களூர் போவதை தன்னிடம் சொல்லவில்லை என நிரஞ்சனும்..
நிரஞ்சனை தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது என மதியும் மிக்க குழப்பத்தில் இருந்தனர்.
லேசாக தூறல் போட ஆரம்பித்தது..
மேகு.. அப்படியே லிங்கம் மாமா வீட்டுக்கு வண்டிய விடு மச்சி பாத்துட்டு போலாம்.
சரி மச்சி.. ஆமா என்ன கிஃப்ட் அது.. நா கூட கேக்கலாம்னு நினச்சேன்..
அட.. இன்னும் கொஞ்ச நேரம் தானே.. நீயும் பாக்கதானே போற..
சரி.. வீடு வந்துடுச்சி.. வா போகலாம்..
மாமா மாமா.. இருக்கிங்களா..?
யாரு.. இருங்க வரேன்..அட.. நிரஞ்சனா.. எப்போ வந்திங்க வெளிநாட்டுல இருந்து..
இன்னைக்கு தான் மாமா வந்தேன்.. சரி அத்தைய கோவில்ல பாத்தேன்.. உங்களையும் பாத்திட்டு போகலாமேன்னு வந்தேன்..
சரி உள்ள வாங்க.. வா மேகு.. நல்லா இருக்கியா..!?
நல்லா இருக்கேன் பா.. நீங்க..?
நல்லா இருக்கேன்..பேசிக்கொண்டே நிரஞ்சனின் பார்வை வீட்டை நோட்டம் விட்டது...
எங்க யாரையும் காணோம்.. எங்க போனா மதி.. கோவில்ல கூட காணோம்.. ஒருவேளை உள்ளயே இருக்காளா என தன் மனதிற்குள் கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தான் நிரஞ்சன்..
கொஞ்ச நேரம் இருங்க.. மதி, தமிழ் வீட்டுக்கு போயிருக்கா.. வந்தவுடனே டீ சாப்பிட்டு போகலாம்..
ESTÁS LEYENDO
அவள் கனவு
Romanceநண்பர்களுக்கு வணக்கம் 🙏 இந்த காதல் கதை என்னுடைய முதல் முயற்சி, முடிந்த வரை முகம் சுளிக்க வைக்காமல் எழுதி இருக்கிறேன். ஏதேனும் பிழைகள் இருப்பின் பொறுத்துக் கொண்டு முழு தொகுப்பினையும் படித்து நிறை குறைகளை கூறுமாறு கேட்டுக்கொண்டு கதைக்கு செல்கிறேன்.