7

200 12 0
                                    

"ஏதோ நடந்திருக்கு... சொல்லி தான் தொலையேன் டி. மூஞ்ச பாத்தாலே தெரியுது ஆதி." கோபத்துடன் வினவினாள் பாவனா.

நீல ஜடை போட்டு, பூ வைத்து, நெற்றியில் சிறிய பொட்டிட்டு குடும்பப் பெண்ணின் பங்கு மாறாமலே இருந்தாள். ஆதிராவிற்கு பாவனாவைத் தெரிந்த மூன்று வருடத்தில் அவளிடம் ஏற்பட்ட மாற்றங்கள் வெகு சிலவே. உடையின் பாணி மட்டும் அல்ல உடைகள் கூட மாறவில்லை என்றே நினைத்தாள் ஆதிரா.

பெருமூச்சொன்றை விடுத்த ஆதிரா, "இது டூ இயர்ஸ் முன்னாடி நடந்த உன் சித்தப்பா பையன் கல்யாணத்துக்கு எடுத்தது தான?" என்றாள்.

"நான் என்ன கேட்டா இது என்ன கேக்குது பாரு," முனங்கினாள் வேறுபுறம் நோக்கி. "என்னைக்காவது நம்ம கொஸ்டின் கேட்டு ஆன்சர் பண்ணி இருக்காளா? கொஸ்டினுக்கு கொஸ்டின் கேக்குறதையே பழக்கமா வச்சிருக்கா... என்ன டா?" அவள் அருகே இருந்த நாற்காலியின் பக்கமாக திரும்பிக் கேட்டாள்.

அவள் அருகே இன்னொருவன் அமர்ந்திருந்தான் - மணி. மெலிந்த தேகம். தமிழருக்கே உரித்தான கரிய நிறம். ஆதிரா பாவனாவுடன் முதுகலைப் படிப்பு படித்த தோழன். பாவனாவும் மணியும் படிப்பு முடிந்த பின்னரும் ஆதிராவுடன் தொடர்பிலே இருந்தனர் - இணைபிரியா நண்பர்களாக.

பாவனாவின் புலம்பலுக்கு கைபேசியை பார்த்தபடியே ஆமோதித்து தலையை மட்டும் அசைத்தான்.

"ஏய் எரும... நீ அவளுக்கு மேல இருக்க..."

இருவர் சம்பாஷணையில் பெரிதும் நாட்டம் இல்லாதவள் அவளுக்கு முன்னால் ஒய்யாரமாக நின்றிருந்த கண்ணாடிக் குவளையில் இருந்த பழச்சாறை அருந்தினாள்.

மூவரும் கஃபே ஒன்றில் சந்தித்தனர். மூவரும் சந்தித்தால் ஏதேனும் ஒரு கஃபேயில் சந்திப்பது வழக்கம். சாப்பிடும் வரை சாப்பிட்டு முடித்துவிட்டு மணியின் தலையில் பில்லைக் கட்டுவதே பாரம்பரிய பழக்கமாக மாறிவிட்டது.

அவர்களுக்குப் பின்னால் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் நடந்த விளம்பரத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

காதல் கண்கட்டுதே (Completed)Where stories live. Discover now