9

158 12 0
                                    

"ஹலோ... மிஸ். பாவனா?" தெரியாத எண்ணில் இருந்து வந்த அழைப்பில் ஒரு ஆணின் குரல் கேட்டது.

யாராக இருக்கும் என்ற சிந்தனையுடன் அதையே கேள்வியாக கேட்டாள், "எஸ்... நீங்க?"

"ஆதித்யா... ஆதிராவோட..." அதற்கு மேல் அவன் சொல்லத் தேவையில்லை என்று நினைத்தவள் அவனை இடைமறித்தாள்.

"ஓ! ஆதித்யா சார் சொல்லுங்க."

"டிஸ்டர்ப் பண்றதுக்கு சாரி. எனக்கு ஒரு ஹெல்ப் வேணும். அதான்..."

"நோ ப்ராப்லம். சொல்லுங்க."

"ஆதிராவுக்கு ட்ரை பண்றேன். கால் அட்டென்ட் பண்ண மாட்டேன்றா. பட் இப்ப ஒரு அர்ஜண்ட் மேட்டர். அவளுக்கு சொல்லணும். இல்ல வர சொல்லணும்," பரபரப்பாக பேசினான்.

"ஏதாவது வேலையா இருப்பா. கொஞ்சம் வெயிட் பண்ணி பாருங்கலேன்?" என்றாள் பாவனா, ஆதிராவை அழைத்து வாங்கிக் கட்டிக்கொள்ள விருப்பம் இல்லாமல்.

"ஏங்க டூ டேஸ்ஸா ட்ரை பண்ணுறேன். மத்த நாள் பர்சனலா கால் பண்ணேன். இன்னைக்கு அஃபிஸியல்."

"ஓ..." உத்தியோக நிமித்தமாக அழைத்ததினால் அவளால் மறுப்பு சொல்ல முடியவில்லை. ஒரு வாரம் கழித்து ஆதிராவின் கோபம் அடங்கிய பின்பு பேசலாம் என்றிருந்தாள். இப்போது புதிய நட்பிற்காக ஆதிராவின் திட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தாள். "சரி நான் ட்ரை பண்ணி பாக்குறேன். என்ன சொல்லணும்னு சொல்லுங்க."

"தேங்க்ஸ்... எனக்கு கால் மட்டும் பண்ண சொல்லுங்க. இல்ல என் டெக்ஸ்ட்ட பாக்க சொல்லுங்க."

"ஓகே டன்!" ஆதிரா அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை. அதையே பாவனாவும் கூறினாள். அழைப்பு துண்டிக்கப் பட்டது.

பார்த்தவுடனே பாவனாவிற்கு ஆதித்யாவைப் பிடித்துப் போனது. ஆதிரா முகம் குடுத்துப் பேசவில்லை என்பதை உணர்ந்திருந்தவள் அது அவன் மீதிருந்த தவறால் ஏற்பட்டதள்ள என்பதையும் நொடிப் பொழுதில் புரிந்து கொண்டாள். தவறு செய்பவர்கள் மீது பாயும் ஆதிராவின் கோபம் பல கூறிய அம்புகள் தைத்தார் போல இருக்கும். ஆனால் அவன் வந்து அமர்ந்து "ப்ரொபோஸா பண்ணேன்?" என்று கேட்க செல்லமாய் அவன் கையை அடித்ததில் இருந்து இருவருக்குள்ளும் வேறு ஏதோ நடப்பது தெரிந்தது.

காதல் கண்கட்டுதே (Completed)Where stories live. Discover now