36

300 12 0
                                    

வண்ணக் கோலம் பூண்டிருந்தது. நாதம், சிரிப்பு போன்ற மங்கள ஒலிகளுடன், சிறுவர்களின் விளையாட்டு சத்தமும் ஒருங்கிணைந்து மண்டபம் மொத்தம் அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. எங்கு திரும்பினாலும் தங்க சரிகையின் பளபளப்பும் சலசலப்பும், நகைகளின் ரீங்காரமும், கண்ணைப் பறிக்கும் அழகு சிலைகளும், அச்சிலைகளைப் பேணிக்காக்கும் திருமகன்களும் என மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிப் போய்க் கிடந்தது.

அழகுப் பதுமையான பாவனாவும், அவளருகே காதலன் என்ற பொறுப்பைத் துறந்து மணாளன் என்ற பொறுப்பை ஏற்றுவிட்ட அர்ஜுனும், வண்டுகள் போல் உள்ள உறவினர்களை ஈர்க்கும் பூக்கள் போல மேடையை இனிப்பான தாக்கிக் கொண்டிருந்தனர்.

பாவனா வின் அருகே பாசிப்பருப்பு பச்சையும், பிங்க் நிற பார்டரும் கொண்ட பட்டுச் சீலையை உடுத்திக்கொண்டு, வலம் வந்து கொண்டிருந்தாள் ஆதிரா. எத்தனை சொல்லியும் கேட்காமல் பாவனாவின் தோழியும், ஒப்பனை நிபுணருமான காவியா ஆதிராவை ஒப்பனை செய்து அனுப்ப, சாயம் அடித்த பொம்மை போல அசைந்து விட்டால் ஈரமாக இருக்கும் பூச்சு ஒட்டி விடுமோ என்ற பயத்தில் ஆடாமல் அசையாமல் நடந்து கொண்டிருந்தாள்.

கீழே முதல் வரிசையில் அமர்ந்திருந்த மணியும் ஆதித்யாவும் பேசி சிரித்துக்கொண்டு இருந்தாலும், ஆதித்யாவின் பார்வை மட்டும் ஆதிராவையே பின்தொடர்ந்தது. அவனுக்கு அவள் செய்கை ஒருபுறம் சிரிப்பதற்கு சாக்கு கொடுத்தாலும், மற்றொருபுறம் சிறு பிள்ளையைப் போல சிணுங்கும் அவளைக் கொஞ்சவும் தூண்டியது. அதனுடன் அவ்வப்போது அவள் முழு மனதுடன் அவனை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் நினைவுக்கு வந்தது. ஒரு வாரகாலம் சொல்லிவிட்ட காதலுக்கு விடை தெரியாமல் மனம் தவித்த தவிப்பு அவனுக்கு மட்டுமே தெரிந்த நரகம்.

அவனுடைய பயமே தன்னை காதலித்தும் பயத்தில் வேண்டாமென கூறி விடுவாளோ என்பதுதான். வெளியே காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் அவள் முகத்தில் ஏற்படும் சிறு மாறுதல்களை கண்காணித்து விடும் திறனை வளர்த்துக் கொண்டவனுக்கு, அவள் மனதில் இருப்பது ஓரளவிற்கு புரிந்துதான் இருந்தது. அதற்கு விடை என்ன என்பதுதான் அவனுக்கு புரியவில்லை.

காதல் கண்கட்டுதே (Completed)Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin