10

172 12 0
                                    

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அவ்விடமே இருளில் மூழ்கியது. பல்கலைக்கழகத்தில் பயில்வதினால் பெரும் வசதி என்னவென்றால் இரவு பத்து மணி அளவில் கூட உள்ளே ஆள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். பேராசிரியர்களின் சிலர் இரவு வேளைகளில் கூட ஆராய்ச்சிக் கூடத்தில் தலையைப் பிய்த்துக் கொண்டிருப்பதை நடைபாதையில் இருந்தே பார்க்கலாம்.

குறிப்பாக அறிவியலும் அறிவியல் சார்ந்த துறையைச் சார்ந்த பேராசிரியர்கள் ஒரு படி மேலே சென்று ஆராய்ச்சி கூட்டத்திலேயே உறங்குவதற்கும் சில வசதிகள் செய்து வைத்திருந்தனர். அது ஆதிராவிற்கும் வசதியாய்ப் போய் விட்டது.

பால் நிலவு உயரத்தைத் தொடும் வரை அவளும் அவள் வேலையில் ஈடுப்பட்டிருப்பாள். பாவனா கூறிய விஷயங்களை தலையில் போட்டு உடைத்துக் கொண்டவள் அன்று ஆராச்சியில் பெரிதும் ஈடுபடவில்லை என்றாலும் நேரம் கழித்தே விடுதியை நோக்கிப் புறப்பட்டாள்.

விடுதியை அடைய சிறிது தூரம் நடந்து செல்ல வேண்டியதாய் இருந்தது. கேம்பஸ்க்குள் செல்வதாய் இருந்தால் மிதிவண்டியிலேயே விடுதிக்கும் பல்கலைக்கழகத்திற்கும் செல்வது வழக்கம். மிதிவண்டியின் பழுதடைந்த சக்கரத்தை சரி செய்ய பழுதடைய வைத்தவரையே நியமித்திருந்ததால், விரைவில் சரி செய்யப்படாது என்று முடிவு கட்டியவள் நடந்து செல்வதைப் பலகிக்கொண்டாள். மார்கழி மாத இளம்பனியை அனுபவித்த வண்ணம் அன்னநடையிட்டாள். ஆராய்ச்சிக் கூடத்தின் வெப்பத்தில் மூழ்கிய பின்னர் கிடைத்த இன்பச் சாரலில் நனைய மனம் மறுக்குமா என்ன?

அதிலும் அவள் மனம் பாவனாவின் சொற்களை நாடிக் கொண்டே இருந்தது. ஏன் பாவனா ஆதித்யாவை பிடித்திருக்கிறதா என்று வினவினாள்? அவள் கூறிய மாற்றங்கள் உண்மையா? உண்மையாக அவனைப் பிடித்திருக்கிறதா? பிடிக்கும்... ஆனால் அவள் கேட்பது போலப் பிடிக்குமா? என்று எண்ணக்கடலில் அலை கரை புரண்டோடிக் கொண்டிருந்தது.

'அவன ஃபர்ஸ்ட் டைம் பாத்தப்ப சைட் அடிச்சது என்னமோ உண்மை தான். ஆனா அதுக்கப்பறம் அவனுக்கும் எனக்கும் இருக்க பாண்டிங் ஃப்ரெண்ட்ஷிப்ல தான போச்சு? மத்த பசங்க மாதிரி பொண்ணுன்னு என்ன வித்தியாசமா பாக்கவும் இல்ல, தள்ளி வைக்கவும் இல்ல, ரொம்ப உரிமை எடுத்துக்கவும் இல்ல. பிடிக்க வேண்டிய இடத்தில பிடிச்சு, விட வேண்டிய இடத்தில விட்டுக்கொடுத்துப் போன ஒரு நல்ல ரிலேஷன்ஷிப்.' குளிர்காற்று அவளை அலசிச் சென்றது. ஒருமுறை உடல் நடுங்கி மயிர் கூச்சம் ஏற்ப்பட்டது.

காதல் கண்கட்டுதே (Completed)Donde viven las historias. Descúbrelo ahora