27

140 10 0
                                    

விசாரணை முடிந்து ஒரு வாரத்திற்குப் பின் மணி வந்தான். பார்க்க வருகிறாயா என்று கேட்டதற்கு, வர இயலாது என்று சுருக்கமாக பதில் கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டாள் ஆதிரா. ஆதித்யாவின் வேண்டுகோளுக்கு இணங்கி அவனைப் பார்க்கச் சென்றான்.

மதிய வேளை என்பதால் உணவகத்தில் சந்திக்க முடிவு செய்திருந்தனர். தனி அறை ஒன்றில் அமர்ந்திருந்தான் ஆதித்யா. சிறிய அறையின் ஒரு மூளை செயற்கை பூங்கொத்துகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மணியும் குறித்த நேரத்திற்கு வந்து சேர்ந்தான்.

"ஆதிரா?" என்றான் ஆதித்யா. தலையசைத்து வரவில்லை என்பதைத் தெரிவித்தான்.

அவர்கள் கலந்துரையாடப் போகும் விஷயத்தை அவளை வைத்துக் கொண்டு பேச முடியாது என்பது தெரிந்திருந்தும், அவளுடைய கோபம் இன்னதென அறிந்துகொள்வதே முதன்மையாகப் பட்டது ஆதித்யாவிற்கு. மறுபடியும் எதனால் கோபித்துக் கொண்டாள் என்பது சரியாகத் தெரியவில்லை. விஷாலி அன்று மூர்க்கத்தனமாக நடந்து கொள்ள, அவன் அவளைப் பற்றிய விபரங்களை எடுத்துரைப்பதாகக் கூறியும் ஆதிரா கோபித்துக்கொண்டு அவனை விட்டு நடந்து சென்றாள்.

அந்தக் கோபம் தணிய, அவளே அவனைக் காண வந்த போது மீண்டும் என்னவாயிற்று? ஒருவேளை அந்த நிகழ்வை பார்த்திருப்பாளோ? என்ற சந்தேகம் அவனுக்கு இருந்தது. எனினும் உறுதியாகத் தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லாமல் போனது. எப்படித் தெரிந்து கொள்வது என்பதும் புரியவில்லை.

கோபம் தணிய ஒரு நாள் அவளே வருவாள் என்று காத்திருப்பதைத் தவிர வேறு வழி இல்லை அவனுக்கு. நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்பது போல ஆதிராவின் கோபம் என்ற இன்னலில் கூட ஒரு நன்மையைக் கண்டறிந்தான். விஷாலியை அவளிடமிருந்து விலக்கி வைப்பதற்கு இது ஒரு சரியான சந்தர்ப்பம். ஆதிராவை மீண்டும் பார்ப்பதற்குள், விஷாலியை சரிபடுத்தி, அவன் வாழ்க்கையில் இடை படாதபடி பார்த்துவிட முடிவு செய்தான்.

"பாவனா கிட்ட பேசியே ஒன் வீக்குக்கு மேல இருக்கும்னு சொன்னா. எதுனால சண்டைன்னு சொல்லல... அப்ப ஆதி பேசுற ஒரே ஆள் தியா தான். ஆனா அவகிட்ட பேசுறதுக்கு சும்மாவே இருக்கலாம்," என்றான் மணி.

காதல் கண்கட்டுதே (Completed)Where stories live. Discover now