4

572 12 0
                                    

இருள் சூழ்ந்து விட்ட சமயம். ஆராய்ச்சிக் கூடத்தில் தனித்திருந்தாள். காலடி ஓசை கேட்க ஆதிராவின் உடல் நடுங்க ஆரம்பித்தது. அகன்ற கண்கள் திகிலை எடுத்துரைத்தது. காலடி சத்தம் அருகில் வர, பயத்தை திமிர் என்ற போர்வையினுள் போர்த்தினாள். எதையும் சந்திக்கத் தயாரானாள்.

உள்ளே வந்த பெரிய உருவம் ஒன்று தனது முகத்தைக் காண்பிக்கும் முன்னரே கதவை அடைத்து தாழ்பாளிட்டது. திரும்பியபோது அதன் முகம் கொடூரமாக இருந்தது. பற்கள் நீண்டு, தலையில் இரண்டு கொம்புகளுடன் குண்டு ராட்சசனாக காட்சி அளித்தது.

பாம்பின் நாக்கைப் போல அதன் நாக்கு இரண்டு கூறுகளாக வெளி வந்து காற்றில் சுழன்றது. அவ்வப்போது ராட்சசனின் உதடுகளையும் அது ஈரமாக்கிக் கொண்டது.

"உன் திமிர் இருக்கே... திமிர். என்ன ஆனாலும் அத மட்டும் விட மாட்ட இல்ல?" என்ற மகேஷ், காமக் கொடூரன் போல கீழ் உதடை நாக்கால் தடவிக் கொண்டு பற்களுக்கு நடுவே கடித்துக் கொண்டான்.

அவனுடைய எண்ணம் என்னவென ஆதிராவிற்கு அவன் வந்தவுடனேயே ஓரளவுக்கு தெரிந்தது, பின் அவன் செயலில் ஊர்ஜிதமானது. மூச்சை நன்கு இழுத்து விட்டுவிட்டுக் காத்திருந்தாள் - அவனே பேசட்டும் என்று.

"அத அடக்கணும்னு தான் எனக்கு வெறியா இருக்கு. எல்லா பொண்ணுங்களும் எனக்கு பணிஞ்சு பேசுறப்ப, நான் என்ன சொன்னாலும் கேட்டு நடக்குறப்ப, என் வார்த்தை தான் சட்டம்னு நினைக்கிறப்ப... நீ மட்டும்... நீ மட்டும் ஏன்? அது தான் உன்ன விடாம துரத்துனதுக்குக் காரணம். இனிமேல் நான் சொல்றத தான் நீ கேட்டகனும்," ஏதோ பைத்தியக்காரன் போல உளறினான். பித்து தலைக்கேறுகின்றது என்பதை ஆதிரா உணர்ந்தாள்.

'என் அப்பா அம்மா சொன்னா கூட கேக்க மாட்டேன். நீ யாரு டா?' என்று கேட்கத் தோன்றியது.

அவனை தூண்டிவிடவேண்டாம் என்று சிந்தித்தவள் மௌனமாகவே அவனிடம் இருந்து முடியும் தூரம் விலகிச் சென்றாள்.

"இப்ப ஏன் அமைதியா இருக்க? இப்ப பேசு. நான் என்ன சொன்னாலும் அதுக்கு எதுத்து பேசி என்ன வெறுப்பேத்துவ? இப்ப பேசு..." என்று கூறிக்கொண்டே நாலுகால் பாய்ச்சலில் அவளை நெருங்கி, அவள் கையைப் பற்றினான்.

காதல் கண்கட்டுதே (Completed)Donde viven las historias. Descúbrelo ahora