31

151 11 0
                                    

"எப்படி ஆதிரா ஹாஸ்பிடல்ல இருக்கது தெரியும்? நீங்க இந்த ஊரு இல்லன்னு கேள்விப்பட்டேன். இவ்வளவு சீக்கிரமா எப்படி நீங்க வந்தீங்க? யாருக்குமே விஷயம் தெரியாதே?" வேண்டிய எல்லாக் கதைகளையும் கேட்டுத் தெரிந்து கொண்ட பின் அவனுக்கு எழுந்த சந்தேகத்தை வினாவாக கவிராசன் முன் வைத்தான்.

மணியை அன்று உணவகத்தில் சந்தித்த நாள், ஆதிராவின் வாழ்க்கையில் நடந்த விஷயமாக அவன் ஒரே ஒரு வார்த்தை தான் கூறினான் - "கவி".

அவனுடைய கோணத்தில் அனைத்தும் வித்தியாசமாகவே இருந்தது.

"கவி? கவிராசன்?" என்றான் ஆதித்யா. ஆமாம் என தலையை அசைத்தான் மணி.

அவனே ஆரம்பிக்கட்டும் என்று வழக்கம்போல அமைதியைக் கடைபிடித்தான் ஆதித்யா. கவி-ஆதிராவுக்கு இடையே ஒரு காதல் கதை இருப்பதாக அவனுக்குத் தோன்றிய உள்ளுணர்வு உண்மையானது என்பதை மணியின் அந்த ஒற்றை வார்த்தை நிரூபித்து விட்டது.

"கவி-ஆதிரா... சாரி சார் உங்களுக்கு அவ மேல இருக்கு ஃபீல் எனக்குத் தெரியும்... பட் இத வேற வழியா சொன்னா அது சரிவராது!"

அவன் கூற, ஆதித்யா, "நோ ப்ராப்ளம்!" என்றான்.

ஆகவே அவன் மீண்டும் துவங்கினான், "கவி-ஆதிரா ரெண்டு பேரும் உண்மையா நல்ல பேர். ரெண்டு பேரும் ரொம்ப மாடர்ன், புக் ரீடர்ஸ், இங்கிலிஷ் மூவிஸ், டிராவலிங், ஹாபீஸ் எல்லாத்துலயும்... ஆனா ஆதிராவோட ஸ்ட்ரென்த் கவிக்கு கிடையாது. அவனால கஷ்டம்றதையே தாங்கிக்க முடியாது... வீட்ல மூணாவது பையன். போதாதுன்னு கசின்ஸ் ஜாஸ்தி. சோஃபிஸ்டிகேட்டட்டா வாழ்ந்தவன். அரியர் இருக்கதையே அவனால பொறுத்துக்க முடியாது. என் லைஃப்ல இப்படி ஃபெயிலே ஆனதில்லன்னு கூட கோபப்பட்டு, கைய சுவத்துல இடிச்சு... அந்த அளவுக்கு அவனால எதையும் ஹேண்டில் பண்ண முடியாது.

"பட் ஆதி அப்டி இல்ல. உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்... போர்ன்னு சொன்னா, ஃபர்ஸ்ட் ஆளா அவதான் வால் எடுத்துட்டு போவா. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தனி ஆளா கூட அவளால சமாளிக்க முடியும இதுல ரெண்டு பேரும் கம்ப்ளீட் ஆப்போசிட்... ஒருவேளை ரெண்டு பேரும் சேர்ந்திருந்தா, ஆதி லாஸ்ட் வர அவன பாத்துக்கிட்டே இருந்திருக்கணும். ஏன் அவ வேண்டாம்னு சொன்னான்னு எனக்கு தெரியல. ஆனா அன்னைக்கு அவன் ஃபேமிலிய மீட் பண்ண போயிருந்தா. அவனோட சித்தி ஹாஸ்பிட்டல்ல இருந்ததால அவங்கள பாத்துட்டு அப்படியே எல்லாரயும் பாத்துட்டு வந்தா. என்ன நடந்ததுன்னு தெரியல... அன்னைக்கு ஹாஸ்டல் ரூமே இரண்டாயிடுச்சு... நாங்க ரெண்டு பேரும் ஒன்னா தான் ஸ்டே பண்ணி இருந்தோம்...

காதல் கண்கட்டுதே (Completed)Where stories live. Discover now