"ஏய்... எனக்கும் சேத்து வாங்கு." காதோடு கைபேசியை இணைத்துவிட்டு, மூன்று என்று கைகளை தூக்கி காண்பித்துக் கொண்டே இருந்தாள்.
"அதெல்லாம் முடியாது... ஹில் ஸ்டேஷன்ல ஐஸ்கிரீம். வாங்கி குடுக்க மாட்டேன் டி." ஆதித்யா கடையில் வேறு ஏதோ வாங்கி விட்டுத் திரும்பினான்.
"இருடா உன்ன வந்து பாத்துக்குறேன்... நீ சொல்லு," அலைபேசியில் பேசினாள். "எங்க இருக்க? என்ன பண்ற? ஊருக்கு வரேன்னு சொல்லீட்டு போன?"
"இப்ப நான் வீட்லதான் இருக்கேன். மொத்தமா ஷிப்ட் பண்ணி வந்துட்டேன். இனிமேல் எங்கேயும் போறாப்ல ஐடியா இல்ல. சோ இனி எப்ப கூப்பிட்டாலும் ஊர்ல தான் இருப்பேன்." கவிராசன் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தான்.
"சூப்பர் டா!"
"போதும் போதும்... வைங்க. நான் வந்துட்டேன்." இரு சக்கர வாகனத்தின் மீது அமர்ந்து அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவளை, பின்சீட்டில் அமர்ந்து பின்னாலிருந்து அணைத்தான் ஆதித்யா.
"சரிடா... இங்க ஒருத்தன் பொறாமைப்பட ஆரம்பிச்சிட்டான். நான் வைக்கிறேன். அப்புறமா கால் பண்றேன்." கவியிடம் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
"இப்போ உனக்கு என்ன? ஏன் அவன்கிட்ட பேசினா உனக்கு... நீ விஷாலிகிட்ட பேசுறப்ப நான் எதாவது சொல்றேனா?" அவள் பக்கவாட்டில் பார்த்து முறைத்தாள்.
"வேணும்னா நீயும் சொல்லு..."
"சரி! அப்ப இதுக்கு பதில் சொல்லு... அன்னைக்கு ஹாஸ்பிடல்ல இரண்டு பேரும் என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க?"
அவள் மீது சாய்ந்து இருந்தவன், நிமிர்ந்தான். கால் சட்டையில் இருந்த பாக்கெட்டில் கைவிட்டு கைபேசியை எடுப்பது போல பாசாங்கு செய்தான். "கால் வர மாதிரி இருக்கு... ஒரே ஒரு செகண்ட்...!"
"சரிங்க.. சரிங்க... இதெல்லாம் நாங்க ஆல்ரெடி பாத்து முடிச்சாச்சு. புதுசா ஏதாவது ட்ரை பண்ணுங்க! கிளம்புவோமா?" பொத்தான் ஒன்றை அழுத்தி இருசக்கர வாகனத்தைக் கிளப்பினாள்.
வார இறுதி காதல் பறவைகள் காதலைத் துதிக்க மலையேறிப் பறந்தனர்.
************
Hi friends... Kadhal kankattudhe padichu Kan kattucha? Story epdi irundhadhu? Reviews sollunga. Honest a sollunga. Apa than enala improve panika mudiyum. Thanks for your support all along ❣️
YOU ARE READING
காதல் கண்கட்டுதே (Completed)
Romanceஅழகிய தீயேவின் அடுத்த அத்தியாயம்! ஆராய்ச்சியாளருக்கும் மருத்துவருக்கும் இடையேயான காதல் கதை. புதிய பாதை தேடும் பறைவைகளுக்கு நடுவே பழையகாலம் குறுக்கிட, தள்ளு முள்ளு ஏற்பட்டுகிறது. பழையதைக் களைந்து புதியதை உடுத்திக் கொண்டனரா? இல்லை பழகிவிட்ட பாதையான பழ...