24

141 10 0
                                    

குழலி - காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட தோழி. அந்தப் பெயரை ஒரு காகிதத்தில் எழுதி விட்டு அதை பார்த்தபடியே அமர்ந்திருந்தான் ஆதித்யா. குழலியின் மறைவுக்கும் ஆதிரா பேராசிரியர் எழில்ழரசனிடம் ஆராய்ச்சிக்கூடத்தில் நடந்து கொண்ட விதத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கணக்கிட்ட வண்ணம் பேனாவை சுழற்றி விளையாடினான்.

குழலியின் நினைவுகளினால் மதுமிதாவின் தற்கொலையைக் கண்டு மயக்கம் அடைந்ததும், அவளைப் பார்க்கவேண்டும் என்று பைத்தியம் பிடித்தாற்போல் சுற்றியதும், அவளைக் காணாமல் கதறி அழுததும் அவளுடைய கடந்த கால நினைவுகளை உறுதிப்படுத்தியது. எனினும் ஏன் இந்த விடயம் கணக்கிற்குள் ஒப்பவில்லை?

"எங்க சார்? ரெக்கவரி ஆக விட்டா தான?" பாவனாவின் வார்த்தைகள் அவன் நெஞ்சுக்குள் திரும்பித் திரும்பி ஒலிபெருக்கியில் ஒலிப்பது போல ஒலித்துக் கொண்டே இருந்தது.

குழலியின் மரணத்தைப் பற்றிய விஷயங்களை சேகரிக்கத் துவங்கி இருந்தான். பாவனா கூறாத சில விஷயங்கள் அவனை வந்தடைந்தது. காவல்துறையில் நண்பன் இருந்தால் எத்தகைய விஷயத்தையும் அறிந்து கொள்ளலாம். அத்துடன் மணிக்கு தெரிந்தவரை அடுத்து சந்திக்கும்போது கூறுவதாகவும் கூறியிருந்தான்.

போலீஸ் நண்பனிடமிருந்து அவன் சேகரித்த தகவல்கள் புது கோணத்தில் இருந்தது. காவல்துறையின் கோணத்தில்... அந்தக் கோப்புகளைத் தான், தன் முன் வைத்து படித்துக் கொண்டிருந்தான் ஆதித்யா.

மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டதால் ட்ரக்கியல் டியூப் உடைந்து, சுவாச முட்டல் ஏற்பட்டு, நாக்கு வெளியே தள்ளி இறந்துள்ளாள் குழலி. தற்கொலைக்கான காரணத்தை விவரித்தபோது அவளுடைய கைப்பேசியையும் சாட்சியாக எடுத்துக் கொண்டனர். முதலில் அவளைப் பார்த்தது அவளுடைய அம்மா. கதறல் சத்தம் கேட்டு ஓடிச் சென்ற அக்கம் பக்கத்து வீட்டாரே போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். கைபேசியில் இறுதியாக வந்த அழைப்பையும், குறுந்தகவல்களையும் தடவியல் நிபுணர்கள் ஆராய்ச்சி செய்ய, அதில் இருந்த ஒரு குறுந்தகவல்...

காதல் கண்கட்டுதே (Completed)Donde viven las historias. Descúbrelo ahora