25

138 11 0
                                    

"நீ அவளுக்கு அந்த ரூம குடுத்து இருந்தா அவ அப்படி பண்ணி இருக்க மாட்டா. எல்லாம் உன்னால தான். போய் பாரு. அவ செத்துப் போயிட்டா..." குரல் மட்டும் கேட்டது. ஆனால் முகத்தைப் பார்க்க முடியவில்லை.

இருள் மூழ்கிக் கிடந்தது. ஒரு துளி வெளிச்சம் கூட கலக்காத தூய்மையான அக்மார்க் இருள். வார்த்தைகள் மனதிலும் இருளை விதைத்தது. சிரமமாக இருந்தது. நெஞ்சின் மீது கனமான ஏதோ ஒன்று ஏறி அமர்ந்திருப்பதாய்த் தோன்றியது.

எங்கோ கேட்ட குரல் ஆனால் யார் என அறிய முடியாத அவலநிலை. தன்னைக் குறை கூறுவதை சகித்துக்கொள்ள முடிந்தது. ஆனால் உயிரிழப்பிற்குத் தான் காரணம் என்பதை ஏற்றுக் கொள்ள இயலாமல் வேதனையாய் இருந்தது.

"சட் அப்...!" எழுந்து அமர்ந்தாள். வியர்த்துக் கொட்டி இருந்தது.

காலை வெளிச்சம் சாத்தியிருந்த சன்னல்களின் இடுக்குகளில் புகுந்து அவளை எட்டியது. கண்டது கனவா இல்லை நினைவா என்பதை பிரித்தறிய முடியவில்லை. எழுந்த பின்பும் கூட அந்தக் குரல் பரிச்சயப்பட்டதாய்த் தோன்றியது. முன்னர் ஒரு முறை நித்திரையில் ஆழ்ந்திருந்த போதும் கூட இந்தக் குரல் தான் தனக்கு செய்திகள் கூறியதாகத் தோன்றியது. 

அன்று மீண்டும் மதுமிதாவின் தற்கொலைக்கான விசாரணை நடக்கவிருந்தது. முதல் விசாரணை, ஆதிரா வீட்டிற்குச் சென்ற ஒரு வார காலத்தில் மதுமிதாவின் கைபேசியை வைத்து நடந்ததில் மதுமிதாவின் காதலனுடன் நடந்த சண்டையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டதாகக் குறிப்பிட்டு, வழக்கை முடித்து விட்டனர். வசுந்தராவின் கேள்விகளால் மீண்டும் அந்தக் கோப்பு வெளிவந்தது.

கைபேசி சிணுங்கியது. மீண்டும் ஆதித்யா... குறுந்தகவலில்...

[ஏன் கால் அட்டன் பண்ண மாட்டேன்ற? நீ என்ன பாக்க வந்ததா நர்ஸ் சொன்னாங்க.]

கடந்த இரண்டு நாட்களாக அவன் மேற்கொள்ளும் முயற்சி எல்லாம் தவிடுபொடியானது அவளுடைய பிடிவாதத்தில். அதில் அவன் மீது ஏன் இத்தனை கோபம் என்று தான் அவளுக்கும் புரியவில்லை.

காதல் கண்கட்டுதே (Completed)Where stories live. Discover now