"ஹேய்... ஹவ் ஆர் யூ பேபி?" தியாவின் குரல் ஆதிராவை எழுப்பியது. ஒரே ஒரு கோடு மட்டுமே அவளுடைய பெரிய கண்கள் திறந்திருப்பதை உணர்த்தியது.
"மேக்கப் போட்டு ஏன் டி இவ்வளவு பக்கத்துல வந்து கொல்ற? அதுக்கு கத்தியே பெட்டர்..." என்றாள் ஆதிரா மெல்லமாக.
"ஆதி நல்லாகீட்டா!" சுற்றி இருந்தவர்களுக்கு அறிவித்தாள் தியா மகிழ்ச்சியாக.
"உனக்கு என்ன கவுண்டர் விட்டா? ஃபர்ஸ்ட் அத சொல்லு," அர்ஜுன் கூற...
"உன்ன பாத்து தான் சொன்னா கேக்கலையா? வேல பொழப்பு இல்லாம எப்ப பாத்தாலும் இவ போற இடத்துக்கெல்லாம் போறது தான் உன் வேலையான்னு கேட்டா!" தியா உறுமினாள்.
அவன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு, "என்ன தியா...? என்ன பாத்து இப்டி சொல்லீட்ட?" அவன் நடிக்க...
"உண்மையா நாடகத்துல நடிக்க கூட லாயக்கு இல்ல," என்றாள்.
"நீ சும்மா இருக்க மாட்டியா?" பாவனா சிடுசிடுத்தாள்.
சிரித்தபடியே மீண்டும் நித்திரையில் ஆழ்ந்தாள் ஆதிரா.
அடுத்த முறை கண்விழித்தபோது அவளுடைய அப்பா அருகில் இருந்தார். "டாடி!" அவளுக்குச் செல்லும் குளுக்கோஸ் பாட்டிலை மாற்றி இருப்பார் போலும், அந்த சத்தத்தில் தான் விழித்து இருக்கிறாள்.
"பாப்பா? வலிக்குதா? எப்படி பீல் பண்ற?" என்றார் தழுதழுத்த குரலில்.
"தூக்கம் வருது. மம்மி?"
"இதோ..." அவளுடைய அம்மா அருகில் வர, அவர் முகத்தைப் பார்த்தவள், சுற்றிலும் யாரையோ தேடினாள். யாரைத் தேடுகிறாள் என்பதை வினவுவதற்கு முன்னர், மீண்டும் நித்திராதேவி அவளை ஆட்கொண்டு விட்டாள்.
எத்தனை முறை கண்களை திறந்து எத்தனை முறை தூங்கினாள் என்பது அவளுக்கே தெரியவில்லை. அடுத்த முறை திறந்தபோது அவளருகே ஒரு முகம்! அந்த முகத்தைப் பார்த்தாலே பயம் அவள் மனதைக் கவ்விக்கொண்டது. மீண்டும் நித்திரையில் மூழ்கிவிட்டால், தான் திரும்ப கண் விழிக்கவே முடியாமல் போய்விடும் என்றே நம்பினாள்.
YOU ARE READING
காதல் கண்கட்டுதே (Completed)
Romanceஅழகிய தீயேவின் அடுத்த அத்தியாயம்! ஆராய்ச்சியாளருக்கும் மருத்துவருக்கும் இடையேயான காதல் கதை. புதிய பாதை தேடும் பறைவைகளுக்கு நடுவே பழையகாலம் குறுக்கிட, தள்ளு முள்ளு ஏற்பட்டுகிறது. பழையதைக் களைந்து புதியதை உடுத்திக் கொண்டனரா? இல்லை பழகிவிட்ட பாதையான பழ...