"ஹேய்..." அருகில் சத்தம் கேட்டுத் திரும்பினாள் ஆதிரா. எதிரே மதுமிதா நின்றிருந்தாள். காலை நேரம் ஆராய்ச்சிக்கூடம் செல்ல துரிதமாய் நடந்து சென்று கொண்டிருந்தாள். மிதிவண்டியை எடுக்க அன்று ஏனோ மனமில்லை. ஆதலால் பல்கலைக்கழகத்தின் காட்டின் வழியே குருவிகளையும் அணில்களையும் மயில்களையும் அதன் இசைகளையும் ரசித்தபடி செல்ல எண்ணம். ஈடேற்ற முனைந்தவள் நிறுத்தப்பட...
"ஹேய்..." என அழைத்த நங்கையை மேலும் கீழும் பார்த்தாள். குட்டையான சிறிய உருவம், அழகிய வட்ட வடிவ முகம், சிறு சிறு கண்கள், மாநிறம், தைரியமான பெண் என முகத்தில் அறையப்பட்டிருந்தது.
என்ன என்ற கேள்விக்கு அடையாளமான ஒரு புருவத்தை மட்டும் உயர்த்த, அந்தப் பெண் (மதுமிதா), "சீ... உங்க ரூம்ல இருந்து மூணு ரூம் தள்ளி தான் என்னோட ரூம் இருக்கு. பட் கொஞ்சம் கன்ஜெஸ்டட்டா இருக்கு. ஷால் வி எக்ஸ்சேஞ்ச் ரூம்ஸ்?" என்றாள்.
'இது என்ன புதுசா?' என்று நினைத்த ஆதிரா எதுவும் பேசாமல் மௌனம் சாதித்தாள்.
"ஓகேவா?" என்றாள் அவள் ஆதிராவின் தலையை அசைக்க வைக்க.
மௌனம் சாதித்த மங்கை, அப்பெண் வேறு யாரிடமோ பேசிக் கொண்டிருப்பதாகக் கருதி தன் வழியே நடக்கத் துவங்கினாள்.
"ஹேய் உங்ககிட்ட தான் பேசுறேன்," என்றாள். கவனிக்காதவளாய் முன்னேறினாள் ஆதிரா.
"ரெஸ்பெக்ட் குடுக்க தெரியாதா? இல்ல காது கேக்காதா?" என்றாள் அவள்.
நடை தடைப்பட்டது திரும்பிய ஆதிரா, "அதையே நான் கேட்டா?" முறைத்தாள்.
"ஹலோ! என்ன ஓவரா பேசுறீங்க?" ஆதிராவின் பொறுமை விரைவாக செலவாகிக் கொண்டிருந்தது.
"சீ... எனக்கு இதுக்கெல்லாம் டைம் இல்ல." வாயில் இருந்து வேறு விதமான வார்த்தைகள் வருவதற்குள் போய்விட எண்ணினாள் ஆதிரா. திரும்பியவளை மீண்டும் கையைப் பிடித்து நிறுத்தினாள் மதுமிதா.
"ஹலோ! ஐ ஆம் டாக்டர். மதுமிதா!" கையை வைத்து அவளைக் கட்டிக் கொண்டாள்.
YOU ARE READING
காதல் கண்கட்டுதே (Completed)
Romanceஅழகிய தீயேவின் அடுத்த அத்தியாயம்! ஆராய்ச்சியாளருக்கும் மருத்துவருக்கும் இடையேயான காதல் கதை. புதிய பாதை தேடும் பறைவைகளுக்கு நடுவே பழையகாலம் குறுக்கிட, தள்ளு முள்ளு ஏற்பட்டுகிறது. பழையதைக் களைந்து புதியதை உடுத்திக் கொண்டனரா? இல்லை பழகிவிட்ட பாதையான பழ...