மாலைப்பொழுது... ஆதிராவும் நண்பர்களும் நிச்சயதார்த்தத்திற்கு சென்றிருந்த அதே சமயம். ஆதித்யா படிக்கும் கல்லூரியின் மருத்துவமனை வளாகம்...
முக்கால் பேண்ட்டையும், கையில்லாத சட்டை ஒன்றையும் போட்டுக்கொண்டு, தோல் பையை தோளில் மாட்டிக்கொண்டு ஒய்யார நடை போட்டு வந்தாள் விஷாலி.
"நீ சொல்றத எல்லாம் நான் கேட்கணும்னு அவசியம் இல்ல. சரியா? நீ எனக்கு அக்காவா இருக்கலாம்... ஆனா உனக்கு ஒன்னும் தெரியாது. பேசாம போன வெச்சுட்டு வேற வேலைய பாரு..." கைபேசியில் கடித்துக் கொண்டே நடந்தாள்.
"ஆமா எனக்கு ஒண்ணுமே தெரியாது தான். நீ பண்ற சைக்கோ தனத்த நம்ம வீட்ல இருக்கவங்க பொறுத்துக்கராங்கன்றது மட்டும் நல்லா தெரியும். ஆனா வெளியில இருக்கவங்க பொறுத்துக்கனும்னு அவசியமில்லை. அவங்களா அடிச்சு துரத்துறதுக்குள்ள ஒழுங்கா வீட்டுக்கு வா." மறுமுனையில் கடுமையான குரல் விஷாலின் அக்கா - விபத்துக்குள்ளாகி மருத்துவமனைக்கு வந்து ஆதித்யாவிடம் சிகிச்சை பெற்றவர்.
"ஏய் லூசா டி நீ? ஆதித்யாவ மிஸ் பண்ணீட்டு நான் பட்ட கஷ்டத்த நீ பக்கத்துல இருந்து பார்த்துக்கிட்டு தான இருந்த? ஏதோ தெரியாத மாதிரியே பேசுற?" என்றாள் குரலை உயர்த்தி, நடுத்தெருவில் நிற்கும் எண்ணம் கூட இல்லாமல். அக்கம் பக்கத்தில் நடந்தவர்கள் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்றனர்.
"எது? பைத்தியம் மாதிரி எங்கள போட்டு அடிச்சு, வார்த்தைகளால குத்திக் காயப்படுத்தி, கஷ்டப்படுத்தி... அந்த கஷ்டத்தையா சொல்ற?" கோபத்தில் வெறும் சிரிப்பு ஒன்றை அவள் உதிர்த்தாள்.
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லாமல் போகவே, பற்களை நறநறவென்று கடித்தாள் விஷாலி. மாமிச உண்ணிகள் மற்ற விலங்கின் எலும்பைக் கடிக்கும் போது ஏற்படும் சப்தம் கேட்டது. பற்கள் உடைந்து கீழே விழுந்திருக்க வேண்டும்...
"இதுக்கு மேல என்ன பேச வைக்காத. மரியாதையா வீட்டுக்கு வா!" என்றாள் அக்கா.
YOU ARE READING
காதல் கண்கட்டுதே (Completed)
Romanceஅழகிய தீயேவின் அடுத்த அத்தியாயம்! ஆராய்ச்சியாளருக்கும் மருத்துவருக்கும் இடையேயான காதல் கதை. புதிய பாதை தேடும் பறைவைகளுக்கு நடுவே பழையகாலம் குறுக்கிட, தள்ளு முள்ளு ஏற்பட்டுகிறது. பழையதைக் களைந்து புதியதை உடுத்திக் கொண்டனரா? இல்லை பழகிவிட்ட பாதையான பழ...