"டாடி... டாடி..." என்று மயக்கத்திலிருந்து அழைத்தவள் கண்விழிக்க, அடுத்த நான்கு மணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்தார் ஆதிராவின் தந்தை பிரபாகர்.
தூக்க மருந்து கொடுத்து தூங்க வைக்கப்பட்ட ஆதிராவை அவர் வரும்வரை பாவனாவும் அர்ஜுனுன் அருகிலேயே இருந்து பார்த்துக் கொண்டனர். பாவனாவும் ஆதித்யாவும் உணவகத்திற்கு சென்ற சமயத்தில் அர்ஜுன் அவளைக் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டான்.
அப்பாவின் குரலைக் கேட்டு சுயநினைவை அடைந்தாள் ஆனால் அவர் அலைபேசியில் அழைப்பைத் துண்டிக்கும் வரையில் விழிகளைத் திறக்கவில்லை. கண்விழித்த மாத்திரத்தில் தேம்பித் தேம்பி அழத் துவங்கினாள் ஆதிரா. எதற்கு அழுகிறாள் என்பது அவளுக்கே தெரியவில்லை. பாவனாவின் தோள்பட்டையில் இருந்த துப்பட்டா நனைந்தது. இரு பெண் பிள்ளைகளுக்கும் அவர்களுக்கு வேண்டிய தனிமையைக் கொடுத்துவிட்டு ஆண் பிள்ளைகள் இருவரும் விலகிச் சென்றனர்.
கருமை படர்ந்து இருந்த நினைவுகளில் தீப்பொறி போல ஏதோ ஞாபகம் வந்தது. அவள் எங்கோ செல்ல வேண்டும் என்பது அவளுக்குப் புரிந்தது. ஆனால் அது எந்த இடம் என்பது தான் மூளையில் தென்படவில்லை.
திடீரென ஆள் அரவம் இல்லாமல் போனது. ஏதோ அவளை துரத்துவது போன்ற ஒரு உணர்வு. கண்களை முழிக்காமலேயே இருந்தால் துரத்திக் கொண்டு வருவது தன்னைக் காணாமல் போய்விடும் என சிறு குழந்தையைப் போல நம்பினாள். அவளைத் துரத்தியது அவளுக்கு பெரும் பயத்தை ஏற்படுத்தியது. 'திறக்க மாட்டேன்... திறக்க மாட்டேன்... என்ன விட்டுப் போயிடு. நான் கண்ண திறக்க மாட்டேன்...' என மனதினுள் ஓதிக் கொண்டே இருந்தாள்.
"ஆதிரா... ஆதிரா... கேக்குதா? நான் பேசுறத கேக்க முடியுதா? கேட்டுக்கோ... மது... மதுமிதா. டாக்டர் மதுமிதா இறந்துட்டா. சூசைட் பண்ணிக்கிட்டா... நீ காப்பாத்த நினைச்சும் என் ஃபிரண்ட காப்பாத்த முடியல. மது இறந்துட்டா," ஒரு அழுகை குரல் ஆதிராவின் காதுகளில் ஒலித்தது. பின் ஒரு காலடிச் சத்தம் அவளை விட்டு விலகிச் சென்றது.
VOCÊ ESTÁ LENDO
காதல் கண்கட்டுதே (Completed)
Romanceஅழகிய தீயேவின் அடுத்த அத்தியாயம்! ஆராய்ச்சியாளருக்கும் மருத்துவருக்கும் இடையேயான காதல் கதை. புதிய பாதை தேடும் பறைவைகளுக்கு நடுவே பழையகாலம் குறுக்கிட, தள்ளு முள்ளு ஏற்பட்டுகிறது. பழையதைக் களைந்து புதியதை உடுத்திக் கொண்டனரா? இல்லை பழகிவிட்ட பாதையான பழ...