22

143 10 0
                                    

பேருந்து நிறுத்தம்... மணியின் அக்காவின் கல்யாணம் முடிந்து இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. பதினான்கு நாட்களில் நான்கு முறை வேலை நிமித்தமாகப் பார்த்துக்கொண்டனர் ஆதித்யாவும் ஆதிராவும். ஒருமுறை அவள் மருத்துவமனைக்குச் சென்றாள். உள்ளே விஜயம் செய்தால், எங்கே எழிலரசனைப் பார்க்க நேர்ந்துவிடுமோ என்று எண்ணியவன், உள்ளே வரவேண்டாம் என கூறி வெளியிலேயே நிறுத்தி விட்டு... அவனுடைய பரபரப்பான சூழலுக்கு இடையே வெளியே வந்து அவளுக்கு வேண்டுவனவற்றைக் கொடுத்து அனுப்பினான்.

பேருந்து நிலையத்தில் அன்று அவனுக்காகக் காத்திருந்தாள். அவனுடன் ஊரில் இருந்து வந்து இறங்கிய நாள் ஞாபகத்தில் உயிர்பெற்று எழுந்தது. அதிகாலையில் பேருந்து நிலையத்தில் இருவரும் ஆட்டோ அல்லது பேருந்து ஏதேனும் வருமா என பார்த்தபடி அமர்ந்திருந்தனர். மற்றும் சில பயணிகளும் அவர்களுடன் அவ்விடத்தில் இருந்தனர்.

சில்லென காற்று வீச சிறிது நடுங்கினாள். மணி அதிகாலை 4.45 என்பதால் குளிர் சிறிது காற்றில் ஏறித்தான் இருந்தது. கொட்டாவி விட்டாள். கால் மேல் கால் போட்டுக்கொண்டு கையை ஊன்றுகோல் ஆக்கினான். அதை கண்ணத்தில் முட்டுக்கொடுத்து தலையை தாங்குமாறு செய்தான். முழித்திருப்பது போல தூங்கிக்கொண்டு இருக்கின்றானோ என்று கூட ஆதிராவுக்கு சந்தேகம் எழுந்தது. குளிர் தாளாமல் எழுந்து இருமுறை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் நடந்தாள். நடக்கும் போதே அவன் முகத்தை கவனிக்க, கண்கள் மட்டும் அவளுடனே அலைபாய்ந்தது.

"குளிரல?" என்றாள்.

"இதமா தான் இருக்கு." வாய் மட்டுமே அசைந்தது. குளிரில் உறைந்து விட்டானோ என்று நினைத்தாள்.

"எனக்கு குளிருது!"

"மத்த டேஸ் ஊர்ல இருந்து வர்றப்ப இங்க தனியா இருப்பியா?" ஆர்வமும் அக்கறையும் இருந்ததை அவள் கவனிக்கத் தவறவில்லை.

"இல்ல... நீ வரன்னு தான் வேகமாக கிளம்பினேன். இல்லன்னா டிராவல்ஸோட லாஸ்ட் பஸ்ல தான் கிளம்புவேன். இங்க வர 6 ஆர் 6.30 ஆயிடும்." தன்னை நம்பி வந்தாள் என்பது அவனுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. உள்ளுக்குள் குதியாட்டம் ஒன்றை நிகழ்த்திக் கொண்டான்.

காதல் கண்கட்டுதே (Completed)Wo Geschichten leben. Entdecke jetzt