35

170 11 1
                                    

மூன்று மாதங்களுக்குப் பின்...

சொல்லாமல் காதல் சொல்லப்பட்டது. உடல்நிலை முன்னேறி ஆதிரா பல்கலைக்கழகத்திற்குத் திரும்பும் நாள். அப்பா சொல்லைக் கேட்காது, அவருக்கு அலைச்சல் வைக்க வேண்டாம் எனக் கருதி, அவள் வழக்கமாக செல்லும் பேருந்தில் செல்வதாக முறையிட்டு வெற்றிபெற்றாள். பேருந்திலும் ஏறியாகிவிட்டது. அருகில் இருந்த இருக்கை காலியாக இருந்தது. அத்துடன்  முன்னர் ஆதித்யாவுடன்  செய்த பயணம் நினைவிற்கு வந்தது. நினைத்தபடி மெல்ல புன்னகைத்தாள். ஜன்னல் ஓரம் எட்டிப்பார்த்த நிலவை கண்சிமிட்டி துணைக்கு அழைக்க, அவள் துணை உனக்கெதற்கு? நான் இருக்கின்றேனடி... என்பது போல அருகில் வந்து அமர்ந்தான் ஒருவன். திரும்பிப் பார்ப்பதற்குள் அவனுடைய வாசனையே அவன் யார் என்பதை உணர்த்தியது.

"ஹாய்...! நீ இங்க எப்படி?" ஆச்சரியத்துடன் மகிழ்ச்சியும் பாலும் தேனும் கலந்தது போல் அவள் முகத்தில் கலந்து தெரிந்தது. அதை அவள் மறைக்க மறந்தாள்.

"மகாராணி வர்றீங்க. சேவகன் இல்லாம எப்படி?" என்றான் கேலியாக. கண்களை உருட்டினாள்.

"போரடிக்கும்னு நினைச்சேன். நல்ல வேள..."

"அட் யுவர் சர்வீஸ் மேடம்!" அவன் புன்னகையுடன் தலையைத் தாழ்த்திக் கூற, அவளுடைய விரல்கள் விளையாட்டாக அவனை சீண்டிப் பரிகசித்தது.
பொய் அடியைத் தாங்க முடியாதவன் போல பாவனை செய்து சிரித்தான்.

"ஆமா உன் கேர்ள் ஃப்ரெண்ட் எப்படி உன்ன விட்டா இங்க வர்றதுக்கு? பயங்கரமான ஆளா இருப்பா போல..." வேண்டுமென்றே வம்பு பேச.

"உனக்கு குளிருதா?" என்றான் அவள் மலர்ந்த முகத்தைப் பார்த்து உருகியபடி. அவளுக்கு அவன் பார்வை தீக்குச்சியாகத் தெரிந்திருக்க வேண்டும், பற்ற வைக்க அவள் கன்னங்களை நெருப்பு நாணம் என்ற பெயரில் பற்றிக்கொண்டு எரிந்தது.

கன்னங்கள் சிவக்கும் வித்தையை கண்கொட்டாமல் பருகிக் கொண்டிருந்தவன், மேலும் அதை மெருகேற்ற, "எனக்கு குளிருது. ஜன்னலை அடச்சிடலாம்," என்று கூறி அவளைத் தாண்டி இருந்த சன்னலை அவன் அணுக, ஸ்பரிசங்களும் சேர்ந்தே அணுகின.

காதல் கண்கட்டுதே (Completed)Donde viven las historias. Descúbrelo ahora