அத்தியாயம் - 2

8.4K 182 17
                                    

கோபத்தில் சீறிவிட்டு போகும் கணவனுக்கும், அவரை எதிர்த்து பார்த்துக்கொண்டு நிற்கும் மகனுக்கும் இடையே அடுத்து என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல் ஒரு நிமிடம் குழப்பத்தில் நின்றார் வித்யா.  

அதற்குள் அவரின் போன் ரிங் ஆனது.  அதை எடுத்து பேசியவரின் முகம் தெளிந்தது.  "வந்துட்டாளா!! யாரு இசை கூட்டிட்டு வந்தானா? சரி சரி பத்திரமா வந்துட்டால்ல." என்று எதையும் வெளிப்படையாக சொல்ல முடியாத ஒரு தவிப்பில் வித்யா பேச எதிர்புறம் பேசிய மலர்விழி லேசாக சிரித்தார்.

"வித்யா இனியா  எல்லாத்தையும் சொல்லிட்டா.  இது என்ன இன்னைக்கு நேத்தா  நடக்கு.  இரண்டு பேரும் விவரம் தெரிந்ததில் இருந்து இப்படித்தானே அடிச்சிக்குறாங்க. நீயும் நானும் சின்ன வயசிலே இருந்தே நல்ல தோழிகள்.  அந்தஸ்தில் நீயும் நானும் எட்டாத இடத்தில் இருந்த போதும் நீ இன்னும் அப்படியேதான் என்னுடன் பழகுற.  நம்ம நட்பை உன் கணவரும் மதிச்சாரு.  அதையே நாம எல்லோரிடமும் எதிர்பார்க்க முடியுமா? ஜெய் இந்த காலத்து பிள்ளை. அவனின் பழக்கம் வழக்கம் எல்லாம் வேறமாதிரிதான் இருக்கும்.  அதை நாமதான் புரிஞ்சி நடந்துக்கணும்.  

உன் மகனை மாதிரிதான் என் மகளும் இருக்குறா.  எனக்கு புரிஞ்சது அவளுக்கு புரியமாட்டேங்குது.  நானும் சொல்லி பார்த்துட்டேன். ஆனால் அவளுக்கு அதை ஏத்துக்குற பக்குவம் இல்லை.  வீட்டுல எல்லோருக்கும் செல்லம் அவ.  யாரு என்ன சொன்னாலும் அவ இஷ்டப்படிதான் நடக்குறா. அழுத்தி சொல்லவும் முடியல." என்றார் மலர்விழி.

"மலர் நீ என்னை புரிஞ்சிகிட்டல, அது போதும் எனக்கு. இனியா தங்கம் என்ன செய்துட்டு இருக்கா? சூப்பு ஏதாச்சும் போட்டு கொடு.  மழையில் நனைஞ்சி  சளி பிடிச்சிக்க போகுது." என்றார் வித்யா அக்கறையுடன்.

"அவளுக்கு சூப்பு வைச்சு கொடுக்கனுமா? அவளைத்தான் சூப்பு வைக்கணும்.  வந்தவ வீட்டுக்கு உள்ளே கூட வரல.  ஜெய்யை  பற்றி வண்டி வண்டியா புகாரை வாசிச்சிட்டு காலணில உள்ள பொடிசுங்க கூட மழையில் ஆட போயிட்டா. காச்சலே வந்தாலும் அலுக்கும் வரை ஆடிட்டுத்தான் வருவா." என்றார் மலர் சிரித்துக்கொண்டு. 

விழியோரம் காதல் கசியுதேМесто, где живут истории. Откройте их для себя