அத்தியாயம் - 21

3.9K 186 28
                                    

விதுலனும், இனியாவும் வார்த்தை போர் நடந்திக்கொண்டு பேசாமல் இருந்தது ஒருநாள்தான்.  அதற்கு மேல் அவனால் இருக்க முடியவில்லை.  ஏனென்றால் எதைப்பற்றி பேசுவதென்றாலும் அவளிடம்தான் பேசியாக வேண்டியதிருந்தது.  இவன் புதிதாக தொழில் தொடங்குவதில் சதன்யாவுக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை. 

"என்ன ஜெய் பேசுறிங்க? உங்களிடம் இல்லாத பணமா? தொழிலா? எதுக்காக நீங்க போய் அஞ்சுக்கும், பத்துக்கும் இன்னொருவரின் கையை எதிர்பார்க்கணும்? எதுக்காக பேங்க் லோன் அது இதுன்னு உங்க தரத்தை குறைச்சிக்கனும்.  உங்க அப்பாவை போய் பாருங்க. நம்ம நேரில் பார்த்து பேசி இதற்கு ஒரு முடிவு எடுக்கலாம். உங்களை நான் உடனே பார்க்கணும், நாம எப்பவும் மீட் பண்ணும் ஹோட்டலில் டேபிள் புக் பண்ணுங்க.  ஈவினிங் நாம மீட் பண்ணலாம்." என்றாள் சதன்யா. 

"ஆங் சது நல்லவேளை நீயே நியாபகபடுத்திட்ட , நான் இதைப்பற்றி உன்னிடம் பேசவேண்டும் என்று நினைத்திருந்தேன்.  சது நான் முன்னாடி மாதிரி பணக்காரன் கிடையாது இஷ்டத்திற்கு செலவு பண்ண. என்  சின்ன சின்ன செலவுக்கு அவளிடம் இருந்துதான் நான் பணத்தை வாங்குகிறேன்.  அதனால இந்த மாதிரி பெரிய ஹோட்டலில் எல்லாம் நாம் இனி மீட் பண்ண முடியாது. ஏதாவது பார்க், பீச்லதான் மீட் பண்ண முடியும்." என்றான் விதுலன். 

"ஜெய் ப்ளீஸ் இன்னொரு முறை நீங்க இதை மாதிரி பேசாதிங்க, என்னால் உங்களை இந்த நிலையில் பார்க்க முடியல. இதுக்காகத்தான் இத்தனை நாள் நீங்க என்னை பார்க்க வரவில்லையா?" என்று அவள் குரல் கரகரக்க கேட்க 

"அப்படியில்லை, அதுவும் ஒரு காரணம்தான்.  கொஞ்சம் வேலையும் இருந்தது.  வீடு மாறினோம்." என்று இவன் வீட்டை மாற்றிக்கொண்டு வந்ததை சொல்ல 

"இதாவது டபுள் பெட்ரூம்மா? இனியாவது  அவ தனியா படுப்பாளா?" என்று கேட்டாள் சதன்யா பட்டென்று.  

விதுலனுக்கு அவள் மேல் பரிதாபம் வந்தது.  எந்த பெண்ணுக்குத்தான் பிடிக்கும் தன் காதலன் இன்னொரு பெண்ணுடன் ஒரே அறையில் தங்கியிருப்பது? ஆனாலும் அதற்காக எதுவும் செய்யமுடியாது இவனால். 

விழியோரம் காதல் கசியுதேOù les histoires vivent. Découvrez maintenant